Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • வீரத்திற்கும், தியாகத்திற்கும் அழியாத அடையாளமாகத் திகழும் மருது சகோதரர்களின் 225-வது நினைவு தினம்

வீரத்திற்கும், தியாகத்திற்கும் அழியாத அடையாளமாகத் திகழும் மருது சகோதரர்களின் 225-வது நினைவு தினம்

வீரமங்கை வேலுநாச்சியாரின் வெற்றிக்குத் துணைநின்று, ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கு எதிராகத் துணிச்சலுடன் போராடிய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர்களான பெரிய மருது, சின்ன மருது சகோதரர்களின் 225-வது நினைவு தினமான இன்று, அவர்களின் வீரத்திற்கும் தியாகத்திற்கும் எனது வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன். தாய்நாட்டின் விடுதலைக்காகவும், மக்களின் உரிமைகளுக்காகவும் தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்த மருது சகோதரர்கள், தமிழர்களின் வீர வரலாற்றில் என்றும் அழியாத இடத்தைப் பெற்றுள்ளனர். 1801-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக மக்களை ஒன்றிணைத்து விடுதலை உணர்வை விதைத்த அவர்களின் போராட்டமும், தேசப்பற்றும், தன்னலமற்ற தியாகமும் தலைமுறைகள் கடந்தும் நமக்கு எழுச்சியூட்டுகின்றன.

வீரம், மானம், தேசப்பற்று, மக்கள் நலன் ஆகிய உயரிய கொள்கைகளுக்காக வாழ்ந்து மறைந்த மருது சகோதரர்களின் இலட்சியங்களைப் போற்றிப் பாதுகாப்பதே நாம் அவர்களுக்குச் செலுத்தும் உண்மையான மரியாதையாகும். தமிழினத்தின் பெருமையையும், வீரத்தையும் உலகறியச் செய்த அந்த மாவீரர்களின் புகழ் காலத்தால் அழியாது. மருது சகோதரர்களின் 225-வது நினைவு தினத்தில் அவர்களுக்கு எனது பணிவான வீரவணக்கங்கள்.

Releated Posts

தீபாவளி திருநாள் வாழ்த்துச் செய்தி

தீமையை அழித்து, நன்மை வெல்லும் என்ற உயரிய தத்துவத்தையும், இருளை அகற்றி ஒளியை ஏற்றும் நம்பிக்கையையும் உலகிற்கு உணர்த்தும் உன்னதத் திருநாளே தீபாவளி. ஏழை,…

ByBySenthil KumarNov 7, 2026

தேமுதிக தமிழ்நாடு நாள் வாழ்த்துச் செய்தி

இன்று 01 நவம்பர் தமிழ்நாடு நாள் இந்த உலகின் மூத்த மொழி தமிழ் மொழி, நமது முன்னோர்களால் போற்றி காப்பாற்றப்பட்ட  நமது தமிழ் மொழியையும்,…

ByBySenthil KumarNov 1, 2026

தேமுதிக – பத்திரிக்கை செய்தி – 30.10.2026

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் திரு. மல்லிக்கார்ஜூன கார்கே ஜி அவர்களை, இன்று (30.10.2026) தேமுதிக பொருளாளர், மாநிலங்களவை உறுப்பினர் திரு.எல்.கே.சுதீஷ்…

ByBySenthil KumarOct 30, 2026

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119-வது ஜெயந்தி விழா, 64வது குரு பூஜையை முன்னிட்டு கழக பொதுச் செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த்,MLA., அவர்கள் மரியாதை செலுத்தினார்.

முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119-வது…

ByBySenthil KumarOct 30, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...