Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் மறைவிற்கு இரங்கல் செய்தி

தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் மறைவிற்கு இரங்கல் செய்தி

இசையால் கோடிக்கணக்கான இதயங்களை வென்ற மாபெரும் இசைக்கலைஞர், தேனிசைத் தென்றல் திரு.தேவா அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன். தமிழ்த் திரையுலகின் இசை வரலாற்றில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றவர் தேவா அவர்கள். தனது இனிமையான மெட்டுக்களாலும், மண்ணின் மணம் மாறாத நாட்டுப்புற இசையாலும், காலத்தால் அழியாத பாடல்களாலும் தலைமுறைகள் கடந்து மக்களின் இதயங்களில் நீங்காத இடம்பிடித்த மகத்தான இசை மேதை. எனது அன்புக் கணவர், புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும், இசையமைப்பாளர் தேவா அவர்களுக்கும் இடையே நிலவிய நட்பும் அன்பும் மிகவும் ஆழமானவை. திரையுலகில் இருவரும் இணைந்து பணியாற்றிய பல திரைப்படங்களின் பாடல்கள் இன்றளவும் மக்களின் மனங்களில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

குறிப்பாக, “வாராரு வாராரு அழகர் வாராரு” என்ற பாடல், ஆண்டுகள் பல கடந்தும் தமிழர்கள் வாழும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஒலித்துக்கொண்டிருப்பது, தேவா அவர்களின் இசைக்கு காலத்தால் அழிவில்லை என்பதற்குச் சிறந்த சான்றாகும். கேப்டன் அவர்களின் திரைப் பயணத்தில் அவரது வீரத்தையும், மக்கள் மீதான அன்பையும், உணர்வுகளையும் இசையின் வழியாக மக்களிடம் கொண்டு சேர்த்ததில் தேவா அவர்களின் பங்களிப்பு என்றும் மறக்க முடியாதது. இசையுலகில் புகழின் உச்சத்தைத் தொட்டபோதும் எளிமையையும் பண்பையும் மனிதநேயத்தையும் கடைப்பிடித்தவர். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு மட்டுமின்றி, இந்திய இசையுலகிற்கே ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். கேப்டன் அவர்களுடன் இணைந்து பல மறக்க முடியாத இசை நினைவுகளை உருவாக்கிய தேவா அவர்கள், இன்று நம்மிடையே இல்லாவிட்டாலும், அவருடைய இசை என்றென்றும் நம்முடன் வாழும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், மகன் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா அவர்களுக்கும், உறவினர்களுக்கும், திரையுலகினருக்கும், உலகெங்கும் உள்ள அவரது இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இசைக்கு மரணமில்லை!

தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் புகழுக்கு என்றும் அழிவில்லை!

Releated Posts

தவெக கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்களின் மறைவிற்கு இரங்கல் செய்தி

தவெக கட்சியின் கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனை அடைந்தேன்.…

ByBySenthil KumarNov 19, 2026

நவம்பர் 14 தேசிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள் செய்தி

குழந்தைகளின் புன்னகையே தேசத்தின் மகிழ்ச்சி! அவர்களின் எதிர்காலமே நாட்டின் உண்மையான வளர்ச்சி!. இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளான நவம்பர்…

ByBySenthil KumarNov 14, 2026

திருவண்ணாமலையில் ஏரியில் மூழ்கி 4 சிறுமிகள் உயிரிழந்த குறித்து ஆழ்ந்த இரங்கல் செய்தி

திருவண்ணாமலையில் ஏரியில் மூழ்கி 4 சிறுமிகள் உட்பட 5 பேர் உயிரிழந்த துயரச் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. வாழ்க்கையில் எண்ணற்ற கனவுகளுடன்…

ByBySenthil KumarNov 10, 2026

தமிழகத்தில் தொடரும் கொலைச் சம்பவங்கள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் – தமிழக அரசுக்கு கடும் கண்டன அறிக்கை

தமிழகத்தில் தொடர்ந்து வெளியாகி வரும் கொலை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகின்றன. நேற்று ஒரே நாளில் காவலர் உட்பட 9…

ByBySenthil KumarNov 10, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...