Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் உலக மருத்துவர்கள் தின வாழ்த்துக்கள்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் உலக மருத்துவர்கள் தின வாழ்த்துக்கள்

மருத்துவர்களின் வரலாற்றில், மறக்க முடியாத நாள் இன்று (01-07-2026) மருத்துவர்கள் தினம்!. இந்த ஆட்சி அமைந்த பிறகு முதன் முறையாக உலக மருத்துவர் தினம் கொண்டாடப்படுகிறது. மருத்துவத் துறையில் முன்மாதிரியான மாநிலமாகத் திகழும் நமது தமிழ்நாட்டில், மருத்துவர்களுக்கு அவர்களின் தகுதிக்கும், பணிச்சுமைக்கும் ஏற்ற ஊதியம் வழங்கப்படாதது மிகவும் வேதனைக்குரியதாகும். நீண்ட காலமாகவே மருத்துவர்கள் பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசின் முன் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக, தங்களின் தகுதிக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் முக்கியக் கோரிக்கையாகும். இந்த உலக மருத்துவர் தினத்தை முன்னிட்டு, கொரோனா காலகட்டத்தில் தங்களது உயிரையே பணயம் வைத்து மக்களைக் காப்பாற்ற அயராது உழைத்த மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையை நினைவுகூர்ந்து, அவர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை தமிழக அரசும், தமிழக முதல்வர் அவர்களும் பரிசீலித்து உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். “இரவு பகல் பாராது மக்களுக்காக சேவை செய்யும், மனித கடவுளாக அனைவராலும் பார்க்கப்படும் மருத்துவர்களை இந்த நாளில் வாழ்த்துவோம்” தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக உலக மருத்துவர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Releated Posts

ஊழல் மற்றும் கோயில் நில மோசடிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை தொடர வேண்டி அறிக்கை

சென்னை, மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரும், தவெக நிர்வாகியுமான வீராசாமி மீது தொடரப்பட்டுள்ள ஊழல் வழக்கில், குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருப்பதை தேமுதிக வரவேற்கிறது.…

ByBySenthil KumarJul 16, 2026

லாக்கப் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே உள்ள ஈத்தன்காடு பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சபரிவர்மன் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்றதாகக் கூறி ஜூலை…

ByBySenthil KumarJul 15, 2026

மருத்துவக் கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை  கண்டித்து அறிக்கை – தேதி: 01.07.2026

தமிழகத்தின் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. தேசிய மருத்துவ ஆணையம்…

ByBySenthil KumarJul 15, 2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 124வது பிறந்தநாள் பத்திரிகைசெய்தி

*தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், பொதுச்செயலாளர் புரட்சி அண்ணியார் திருமதி.பிரேமலதா விஜயகாந்த்,B.A., MLA., அவர்கள் பெருந்தலைவர் காமராஜரின் 124வது பிறந்தநாளையொட்டி இன்று (15.07.2026) (கேப்டன்…

ByBySenthil KumarJul 15, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...