Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டி அறிக்கை

தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டி அறிக்கை

மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் அரசின் முடிவு, பல ஆண்டுகளாக நம்பிக்கையுடன் பணியாற்றி வரும் லட்சக்கணக்கான துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் செயலாகும். இது தொழிலாளர்களை நிரந்தர வேலையின்மை, வருமான இழப்பு மற்றும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. தனியார்மயமாக்கல் நடைமுறை தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய ESI, PF உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு உரிமைகள் மற்றும் பணிப்பாதுகாப்பு வசதிகள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மேலும், ஊதியக் குறைப்பு மற்றும் பணியிடப் பாதுகாப்பின்மை போன்ற பிரச்சினைகளும் உருவாகக்கூடும். மக்களின் சுகாதாரத்திற்கும், நகரங்களின் தூய்மைக்கும் முக்கிய பங்காற்றும் துப்புரவுத் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாப்பது அரசின் கடமையாகும். எனவே, மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் திட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். அத்துடன், தற்போது பணியாற்றி வரும் ஒப்பந்த மற்றும் தினக்கூலித் தொழிலாளர்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்றிடவும், அவர்களின் ஊதியத்தை உயர்த்திடவும், தமிழக அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக சார்பாக வலியுறுத்துகிறோம். “சுத்தம் தான் சோறு போடும்” என்ற பழமொழிக்கேற்ப, சுத்தம் செய்வதையே தங்களது வாழ்வாதாரத் தொழிலாகக் கொண்டு இருக்கும் தூய்மை பணியாளர்கள் சமூகத்தின் ஆரோக்கியத்திற்கும் நலனிற்கும் மிக முக்கியமான பங்களிப்பை வழங்கி வருகின்றனர். அவர்கள் தினமும் பொதுமக்கள் வாழும் சூழலை சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்க கடினமாக உழைக்கின்றனர். எனவே தூய்மைப் பணியாளர்களுக்கு இந்த அரசு உதவி செய்திட வேண்டும்.

Releated Posts

ஊழல் மற்றும் கோயில் நில மோசடிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை தொடர வேண்டி அறிக்கை

சென்னை, மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரும், தவெக நிர்வாகியுமான வீராசாமி மீது தொடரப்பட்டுள்ள ஊழல் வழக்கில், குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருப்பதை தேமுதிக வரவேற்கிறது.…

ByBySenthil KumarJul 16, 2026

லாக்கப் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே உள்ள ஈத்தன்காடு பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சபரிவர்மன் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்றதாகக் கூறி ஜூலை…

ByBySenthil KumarJul 15, 2026

மருத்துவக் கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை  கண்டித்து அறிக்கை – தேதி: 01.07.2026

தமிழகத்தின் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. தேசிய மருத்துவ ஆணையம்…

ByBySenthil KumarJul 15, 2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 124வது பிறந்தநாள் பத்திரிகைசெய்தி

*தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், பொதுச்செயலாளர் புரட்சி அண்ணியார் திருமதி.பிரேமலதா விஜயகாந்த்,B.A., MLA., அவர்கள் பெருந்தலைவர் காமராஜரின் 124வது பிறந்தநாளையொட்டி இன்று (15.07.2026) (கேப்டன்…

ByBySenthil KumarJul 15, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...