Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி அவர்கள் மறைவிற்கு இரங்கல் செய்தி

திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி அவர்கள் மறைவிற்கு இரங்கல் செய்தி

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அருகே நேற்று (05.05.2026) நிகழ்ந்த வாகன விபத்தில் அவர் உயிரிழந்தார் என்கிற செய்தி மிகவும் மனதிற்கு அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. கேப்டன் மீது பேரன்பும் மரியாதையும் கொண்டவர். ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் ஃபிலிம்ஸ்தயாரிப்பில் கேப்டன் நடிப்பில் வெளியான முக்கியத் திரைப்படம் கண்ணுபடப்போகுதய்யா போன்ற பல்வேறு திரைப்படங்களில் பணியாற்றியவர். அனைவரிடமும் அன்போடும் பாசத்தோடும் பழகக்கூடியவர். பழகுவதற்கு மிகவும் இனிமையான ஒரு மனிதர். அவரது இழப்பு திரையுலகிற்கு பேரிழப்பு. அவருடைய ஆன்மா சாந்தியடையவும், அவரை இழந்து வாடும் திரையுலகினருக்கும், குடும்பத்தாருக்கும் தேமுதிக சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Releated Posts

தேமுதிக – தந்தை பெரியார் அவர்களின் 148வது பிறந்தநாள் – பத்திரிகை செய்தி – 17.09.2026

தந்தை பெரியார் அவர்களின் 148 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (17.09.2026) தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர் திரு.ப.பார்த்தசாரதி,Ex:MLA., அவர்கள்…

ByBySenthil KumarSep 17, 2026

தேமுதிக – மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் பத்திரிக்கை செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், புரட்சி அண்ணியார், கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த்,B.A.,MLA., அவர்களின் தலைமையில் இன்று 16.09.2026 புதன் கிழமை காலை 10.30…

ByBySenthil KumarSep 16, 2026

தேசிய முற்போக்கு திராவிட கழகம் மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில்நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தீர்மானம் – 1 தமிழக விவசாயிகளின் துயரத்தையும் கடன் சுமையையும் கருத்தில் கொண்டு, தகுதியான அனைத்து விவசாயக் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்து, விவசாயிகளின்…

ByBySenthil KumarSep 16, 2026

தேமுதிக – பேரறிஞர் அண்ணா அவர்களின் 118வது பிறந்தநாளை முன்னிட்டு பத்திரிக்கை செய்தி – 15.09.2026

*தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த்,B.A.,MLA., அவர்கள் கோயம்பேட்டில் உள்ள கேப்டன் ஆலயத்தில் (தலைமை கழகம்) இன்று (15.09.2026) பேரறிஞர் அண்ணாவின்…

ByBySenthil KumarSep 15, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...