தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளராக செயல்பட்டு வந்த திரு.L.J.J.ஜெகன் அவர்களை இன்று (03.08.2024) முதல் விடுவிக்கப்படுகிறார்.
கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளராக திரு.M.A.இஸ்மாயில் அவர்கள், மாவட்ட கழக அவைத் தலைவர் திரு.L.J.J.ஜெகன் அவர்கள், மாவட்ட கழக பொருளாளர் திரு.A.முருகேசன் அவர்கள் இன்று (03.08.2024) முதல் நியமிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர், வார்டு, ஊராட்சி கழக நிர்வாகிகள், கிளைகழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் என அனைவரும் முழு ஒத்துழைப்பு தந்து கழகம் சிறப்பான வளர்ச்சி பெற பாடுபட வேண்டு மென கேட்டுக்கொள்கிறேன்.