Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • இலங்கை சுதந்திரம் பெற்ற இந்த நாளில் 13 மீனவர்களை துப்பாக்கியால் சுட்டு கைது செய்த இலங்கை அரசை கண்டித்து அறிக்கை

இலங்கை சுதந்திரம் பெற்ற இந்த நாளில் 13 மீனவர்களை துப்பாக்கியால் சுட்டு கைது செய்த இலங்கை அரசை கண்டித்து அறிக்கை

இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக எந்த நிபந்தனையும் இல்லாமல் விடுவிக்க வேண்டும். அவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தைத் தேடித் தான் மீன் பிடிப்பதற்கு வருகின்றனர். அவர்களை அத்துமீறி கைது செய்து அவர்களின் உடைமைக்கும், உயிருக்கும் பங்கம் விளைவிக்கும் வகையிலே தொடர்ந்து இலங்கை அரசு செயல்பட்டு வருகிறது. இது கண்டனத்திற்கு உரிய விஷயம். எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவதும் அவர்களை படகுகளுடன் சிறைப்பிடிப்பதும், மீன் பிடி சாதனங்களை சேதப்படுத்துவதும் தொடர் கதையாகி வருகிறது. பலமுறை இந்தியா அரசு, தமிழக அரசு எச்சரிக்கை விடுத்தும்  கைது நடவடிக்கையிலிருந்து எந்த ஒரு மாற்றமும் இல்லை.  இது தமிழக மீனவர்களிடையே மிகப் பெரிய ஒரு கொந்தளிப்பையும், மன வேதனையும் உருவாக்கி இருக்கிறது. இன்றைக்கு “இலங்கை சுதந்திரம் பெற்ற நாள்” இந்த நாளில் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு சுதந்திரத்தை வழங்கி மனித நேயத்தோடு நீதியும், நேர்மையும் நிலைநாட்ட வேண்டி தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம்.

Releated Posts

விருத்தாச்சலம் சட்டமன்றத் தொகுதி – கடலூர் மாவட்ட ஆட்சியர் நேரில் சந்திப்பு – பத்திரிக்கை செய்தி – 24.07.2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த்,B.A., MLA., அவர்கள் இன்று (24.07.2026) கடலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம்…

ByBySenthil KumarJul 24, 2026

விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதி, பயனியர் நிழற்குடை திறப்பு விழா -பத்திரிக்கை செய்தி – 23.07.2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 2006 முதல் 2011 வரை விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பொழுது விருத்தாசலம்…

ByBySenthil KumarJul 24, 2026

தொடரும் லாக்கப் படுகொலைகள் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

தூத்துக்குடி மாவட்டம் அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் (வயது 24) என்பவர் காவல்துறை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் லாக்கப் படுகொலை செய்து…

ByBySenthil KumarJul 24, 2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக கர்நாடக அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

விவசாயிகளுக்கு ஆதரவாக மேலும் வலுசேர்க்கும் வகையிலும், மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை எதிர்த்தும், காவிரி நதியிலிருந்து இதுவரை தமிழகத்திற்கு உரிய நீரை…

ByBySenthil KumarJul 21, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...