Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 ராமநாதபுரம் மீனவர்கள் உள்ளிட்ட கைது செய்யபட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி அறிக்கை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 ராமநாதபுரம் மீனவர்கள் உள்ளிட்ட கைது செய்யபட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி அறிக்கை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள ராமநாதபுரத்தைச் சேர்ந்த 9 இந்திய மீனவர்களையும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது. குறிப்பாக, ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இதுபோன்ற இரண்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ள நிலையில், தற்போது 49 இந்திய மீனவர்கள் இலங்கை அரசால் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வாழ்வாதாரத்திற்காக கடலுக்குச் செல்லும் மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதால், அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே, மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் இனியும் காலதாமதம் செய்யாமல், இலங்கை அரசுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி, கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

“முந்தைய ஆட்சிகளில் கடிதம் எழுதுவதோடு பணி முடிந்துவிட்டது. ஆனால், நமது அரசு அப்படி கிடையாது” என்று கூறிய முதல்வர் விஜய் அவர்கள், தற்போது அதே பாணியில் கடிதம் மட்டுமே எழுதிக் கொண்டிருப்பது ஏன்?

மேலும், மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா அவர்கள் ஆகஸ்ட் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் சென்னை வருகை தர உள்ள நிலையில், அவர் வருவதற்கு முன்பாகவே தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில், அது ஒட்டுமொத்த மீனவர் சமுதாயத்திற்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும். எனவே “மீனவ நண்பன்” என்று வார்த்தைகளால் முதல்வர் விஜய் அவர்கள் சொல்வதை காட்டிலும், செயலில் அதை நிரூபித்து மீனவர்களை காப்பாற்ற வேண்டியது இந்த அரசின் கடமையாகும்.

Releated Posts

தேமுதிக – தந்தை பெரியார் அவர்களின் 148வது பிறந்தநாள் – பத்திரிகை செய்தி – 17.09.2026

தந்தை பெரியார் அவர்களின் 148 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (17.09.2026) தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர் திரு.ப.பார்த்தசாரதி,Ex:MLA., அவர்கள்…

ByBySenthil KumarSep 17, 2026

தேமுதிக – மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் பத்திரிக்கை செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், புரட்சி அண்ணியார், கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த்,B.A.,MLA., அவர்களின் தலைமையில் இன்று 16.09.2026 புதன் கிழமை காலை 10.30…

ByBySenthil KumarSep 16, 2026

தேசிய முற்போக்கு திராவிட கழகம் மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில்நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தீர்மானம் – 1 தமிழக விவசாயிகளின் துயரத்தையும் கடன் சுமையையும் கருத்தில் கொண்டு, தகுதியான அனைத்து விவசாயக் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்து, விவசாயிகளின்…

ByBySenthil KumarSep 16, 2026

தேமுதிக – பேரறிஞர் அண்ணா அவர்களின் 118வது பிறந்தநாளை முன்னிட்டு பத்திரிக்கை செய்தி – 15.09.2026

*தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த்,B.A.,MLA., அவர்கள் கோயம்பேட்டில் உள்ள கேப்டன் ஆலயத்தில் (தலைமை கழகம்) இன்று (15.09.2026) பேரறிஞர் அண்ணாவின்…

ByBySenthil KumarSep 15, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...