Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • அமோனியா வாயு கசிவுவால் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் செய்தி

அமோனியா வாயு கசிவுவால் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் செய்தி

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த மஞ்சகரணை (கன்னிகைப்பேர்) பகுதியில் செயல்பட்டு வரும் செயின்ட் பீட்டர்ஸ் பால் சீபுட்ஸ் எக்ஸ்போர்ட்ஸ் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மூச்சுத்திணறல் மற்றும் மயக்கமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பது தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பு குறித்து கடும் கேள்விகளை எழுப்புகிறது. தொழிற்சாலைகளில் பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படாததன் விளைவாக அப்பாவி தொழிலாளர்கள் பாதிக்கப்படுவது மிகவும் கண்டனத்திற்குரியது. தமிழக அரசு குழு அமைத்து உண்மையான காரணத்தை கண்டறிந்து சம்பவத்திற்கு காரணமான ஆலை உரிமையாளர்களிடம் உரிய விசாரணை நடத்தி, தண்டனை வழங்க வேண்டும். மனித உயிர்களை துச்சமாக நினைத்து ஆலைகளை நடத்தி இது போன்ற செயல்கள் நடைபெறுவது ஏற்று கொள்ளமுடியாது இது கடுமையான கண்டனத்திற்குரியது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உயர்தர மருத்துவ சிகிச்சை மற்றும் உரிய நிவாரணம் வழங்குவதுடன், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாத வகையில் அனைத்து தொழிற்சாலைகளிலும் பாதுகாப்பு விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் பீகாரை சேர்ந்தவர்கள் என்ற செய்தி வருத்தமளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

Releated Posts

விருத்தாச்சலம் சட்டமன்றத் தொகுதி – கடலூர் மாவட்ட ஆட்சியர் நேரில் சந்திப்பு – பத்திரிக்கை செய்தி – 24.07.2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த்,B.A., MLA., அவர்கள் இன்று (24.07.2026) கடலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம்…

ByBySenthil KumarJul 24, 2026

விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதி, பயனியர் நிழற்குடை திறப்பு விழா -பத்திரிக்கை செய்தி – 23.07.2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 2006 முதல் 2011 வரை விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பொழுது விருத்தாசலம்…

ByBySenthil KumarJul 24, 2026

தொடரும் லாக்கப் படுகொலைகள் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

தூத்துக்குடி மாவட்டம் அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் (வயது 24) என்பவர் காவல்துறை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் லாக்கப் படுகொலை செய்து…

ByBySenthil KumarJul 24, 2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக கர்நாடக அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

விவசாயிகளுக்கு ஆதரவாக மேலும் வலுசேர்க்கும் வகையிலும், மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை எதிர்த்தும், காவிரி நதியிலிருந்து இதுவரை தமிழகத்திற்கு உரிய நீரை…

ByBySenthil KumarJul 21, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...