Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் மறைவிற்கு இரங்கல் செய்தி

தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் மறைவிற்கு இரங்கல் செய்தி

இசையால் கோடிக்கணக்கான இதயங்களை வென்ற மாபெரும் இசைக்கலைஞர், தேனிசைத் தென்றல் திரு.தேவா அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன். தமிழ்த் திரையுலகின் இசை வரலாற்றில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றவர் தேவா அவர்கள். தனது இனிமையான மெட்டுக்களாலும், மண்ணின் மணம் மாறாத நாட்டுப்புற இசையாலும், காலத்தால் அழியாத பாடல்களாலும் தலைமுறைகள் கடந்து மக்களின் இதயங்களில் நீங்காத இடம்பிடித்த மகத்தான இசை மேதை. எனது அன்புக் கணவர், புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும், இசையமைப்பாளர் தேவா அவர்களுக்கும் இடையே நிலவிய நட்பும் அன்பும் மிகவும் ஆழமானவை. திரையுலகில் இருவரும் இணைந்து பணியாற்றிய பல திரைப்படங்களின் பாடல்கள் இன்றளவும் மக்களின் மனங்களில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

குறிப்பாக, “வாராரு வாராரு அழகர் வாராரு” என்ற பாடல், ஆண்டுகள் பல கடந்தும் தமிழர்கள் வாழும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஒலித்துக்கொண்டிருப்பது, தேவா அவர்களின் இசைக்கு காலத்தால் அழிவில்லை என்பதற்குச் சிறந்த சான்றாகும். கேப்டன் அவர்களின் திரைப் பயணத்தில் அவரது வீரத்தையும், மக்கள் மீதான அன்பையும், உணர்வுகளையும் இசையின் வழியாக மக்களிடம் கொண்டு சேர்த்ததில் தேவா அவர்களின் பங்களிப்பு என்றும் மறக்க முடியாதது. இசையுலகில் புகழின் உச்சத்தைத் தொட்டபோதும் எளிமையையும் பண்பையும் மனிதநேயத்தையும் கடைப்பிடித்தவர். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு மட்டுமின்றி, இந்திய இசையுலகிற்கே ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். கேப்டன் அவர்களுடன் இணைந்து பல மறக்க முடியாத இசை நினைவுகளை உருவாக்கிய தேவா அவர்கள், இன்று நம்மிடையே இல்லாவிட்டாலும், அவருடைய இசை என்றென்றும் நம்முடன் வாழும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், மகன் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா அவர்களுக்கும், உறவினர்களுக்கும், திரையுலகினருக்கும், உலகெங்கும் உள்ள அவரது இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இசைக்கு மரணமில்லை!

தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் புகழுக்கு என்றும் அழிவில்லை!

Releated Posts

தனியாரிடம் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டி அறிக்கை

கடந்த காலங்களில் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.13-க்கு கொள்முதல் செய்த நிலையில், மின்மிகை மாநிலமாக இருந்த தமிழ்நாட்டில் தற்போது ஒரு யூனிட் மின்சாரத்தைத் தனியாரிடம்…

ByBySenthil KumarOct 13, 2026

மருத்துவப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டி அறிக்கை

தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் பணி…

ByBySenthil KumarOct 12, 2026

சர்வதேச பெண் குழந்தைகள் தின நல்வாழ்த்துகள் செய்தி

பெண் குழந்தைகள் நாட்டின் கண்கள்! பெண் குழந்தைகளைப் போற்றுவோம்! பெண்ணுரிமையைக் காப்போம்! பெண் குழந்தைகள் குடும்பத்தின் பெருமை மட்டுமல்ல; நாட்டின் எதிர்காலத்தையும் சமூகத்தின் முன்னேற்றத்தையும்…

ByBySenthil KumarOct 11, 2026

அரிசி விலை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

தமிழகத்தில் கடந்த சில காலமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அரிசி விலை கடும்…

ByBySenthil KumarOct 8, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...