தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 22 ஆம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு கோயம்பேட்டில் உள்ள *கேப்டன் ஆலயத்தில் (தலைமை கழகம்)* இன்று 14.09.2026 காலை 10 மணியளவில் கழக பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா விஜய்காந்த்,BA.,MLA., அவர்கள் கழக கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கழக பொருளாளர் பாராளுமன்ற ராஜ்ய சபா உறுப்பினர் திரு.எல்.கே.சுதீஷ்,MP., அவர்கள், கழக உயர்மட்ட குழு உறுப்பினர்கள், கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.










