Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • அரசு மருத்துவமனையில் தவறான மருத்துவ சிக்கிசையால் செவிலியர் கல்லூரி மாணவி உயிரிழப்பை கண்டித்து அறிக்கை

அரசு மருத்துவமனையில் தவறான மருத்துவ சிக்கிசையால் செவிலியர் கல்லூரி மாணவி உயிரிழப்பை கண்டித்து அறிக்கை

திருச்சி புத்தூர் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த செவிலியர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவி சீதாலட்சுமி (வயது 19) தவறான அறுவை சிகிச்சை மற்றும் அளவுக்கு அதிகமான மயக்க மருந்து செலுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் உயிரிழந்தது மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. மருத்துவ துறையில் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ நடைமுறைகள் சரியாக பின்பற்றப்படாததே இந்த இளம் மாணவியின் உயிரிழப்பிற்கு காரணம் என சகமாணவிகள், பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த சம்பவம் அரசு மருத்துவமனைகளின் செயல்பாடு மற்றும் நோயாளி பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. உயிரிழந்த மாணவி சீதாலட்சுமியின் குடும்பத்தினருக்கு மற்றும் சகமாணவிகளுக்கும் தேமுதிக சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மாணவியின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். மேலும், இந்த சம்பவத்திற்கு காரணமான மருத்துவர்கள் மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் மீது உடனடி மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தி, சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம். அத்துடன், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான கண்காணிப்பு மற்றும் மருத்துவ தரநிலைகளை தமிழக அரசு உடனடியாக பலப்படுத்த வேண்டும். மேலும் இனி இதுபோன்ற துயர சம்பவங்கள் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் தேமுதிக சார்பாக வலியுறுத்துகிறோம். “மருத்துவம் பயிலும் செவிலியருக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்களின் நிலை என்ன?” என்ற கேள்விக்குறி அனைவரின் மனதிலும் எழுகிறது.

Releated Posts

தேமுதிக – மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் – தலைமை கழக அறிவிப்பு

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் புரட்சி அண்ணியார், கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் தலைமையில் வரும்…

ByBySenthil KumarSep 9, 2026

உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் கப்பல் கட்டும் தளத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டி அறிக்கை

தூத்துக்குடி அருகே முள்ளக்காடு பகுதியில் சுமார் ரூ.30,000 கோடி முதலீட்டில் சிப்காட் மூலம் பசுமைத்தள கப்பல் கட்டும் தளம் அமைக்க மத்திய, மாநில அரசுகள்…

ByBySenthil KumarSep 9, 2026

மழையில் நனைந்து வீணாகும் நெல் மணிகளைப் பாதுகாக்க, தமிழக அரசு உடனடியாக நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில், குறிப்பாக கும்பகோணம், தஞ்சாவூர், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடியாக நெல் கொள்முதல்…

ByBySenthil KumarSep 7, 2026

கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார்அவர்களின் 155வது பிறந்தநாளில் அவரின் புகழை போற்றுவோம்

ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக அஞ்சாமல் போராடி, சுதேசி உணர்வை மக்களிடம் விதைத்த வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாள் இன்று (05.09.2026) மிக பெரிய செல்வந்தாராக பிறந்து…

ByBySenthil KumarSep 5, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...