தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக பொதுச் செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள், கழக முன்னாள் தொண்டர் அணி செயலாளரும், கழக தேர்தல் பணிக்குழு செயலாளருமான திரு.S.கணேசன் அவர்களின் மறைவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். உடன் கழக இளைஞர் அணி செயலாளர் திரு.வி.விஜயபிரபகர், கழக தலைமை நிலைய செயலாளர் திரு.ப.பார்த்தசாரதி,Ex.MLA., மற்றும் தலைமை கழக நிர்வாகிகள், கழக உயர்மட்ட குழு உறுப்பினர்கள், கழக அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் அனைவரும் மறைந்த திரு.S.கணேசன் அவர்களுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.





