“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற நம்பிக்கையுடன், தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கும் என்ற உறுதியோடு, தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை நாம் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறோம். உழைப்பிற்கு உயர்வு தேடித் தரும் திருநாளாகப் பொங்கல் திருநாள் திகழ்கிறது. இந்நன்னாளில், உணவு படைக்கும் உழவர்களுக்கு உரிய மரியாதை செலுத்தப்படுகிறது. அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி கூறும் வகையில் மாட்டுப் பொங்கல் திருநாளும் இதனுடன் இணைந்து கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருநாளிலிருந்தாவது, எதிர்வரும் காலங்களில் தமிழக மக்கள் தங்களின் கஷ்டங்கள் நீங்கி, நிம்மதியும் வளமையும் நிறைந்த வாழ்க்கை வாழ வேண்டும். 2026 சட்டமன்றத் தேர்தல் தமிழக மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கும் என விரும்புகிறோம். உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடனும், உற்றார் உறவினர்களுடனும், நண்பர்களுடனும் இணைந்து மகிழ்ச்சியுடன் பொங்கல் திருநாளை கொண்டாட வேண்டுமென, கேப்டன் சார்பாகவும், எனது சார்பாகவும், தேமுதிக சார்பாகவும் அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
“தமிழன் என்று சொல்லடா” “தலைநிமிர்ந்து நில்லடா”
“வீழ்வது நாமாக இருப்பினும்” “வாழ்வது தமிழாக இருக்கட்டும்”





