தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) சார்பில் நடத்தப்பட்ட மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 பிரமாண்ட வெற்றி மாநாட்டில் கலந்துகொண்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இம்மாநாட்டில் சிறப்பாக பங்கேற்ற தலைமை கழக நிர்வாகிகள், கழக உயர்மட்டக் குழு உறுப்பினர்கள், கழக தேர்தல் பணிக்குழு செயலாளர்கள், கழக அணி செயலாளர்கள், துணைச் செயலாளர்கள், பிற மாநில செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர், ஊராட்சி மற்றும் கிளை கழக நிர்வாகிகள் ஆகியோர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். தமிழகம் முழுவதும் கொடிகள், பேனர்கள், பேஜ்கள், சுவர் விளம்பரம் எழுதியும், இந்த மாநாட்டில் பங்கேற்க சொந்த செலவில் வாகனங்கள் அமைத்து, உணவு எடுத்து வந்து மாநாட்டில் பங்கேற்று இந்த மாநாட்டை மிக பிரமாண்ட வெற்றி மாநாடாக மாற்றிய அனைத்து கழக உடன்பிறப்புகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும், வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்தி முடித்த கடலூர் மாவட்ட கழக செயலாளர்கள் திரு.P.சிவக்கொழுந்து,Ex.MLA., திரு.R.உமாநாத் அவர்களுக்கும், மற்றும் மாநாட்டிற்கு அயராது உழைத்த கடலூர் மாவட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்களுக்கும், குடிநீர், உணவு, மருத்துவ உதவி முறையாக வழங்கியவர்களுக்கும், பத்திரிக்கை நண்பர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் சமூக ஊடகங்களுக்கும் துணைநின்ற அனைத்து நல்உள்ளங்களுக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக எனது நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன். மாநாடு திடல் அமைக்க இடமளித்த திரு.அஹர் சந் ஜெய்த் அவர்களுக்கும் மற்றும் வாகனம் நிறுத்துவதற்கு இடமளித்த (கார் பார்க்கிங்) அனைத்து நல்உள்ளங்களுக்கும், மாநாட்டு நிகழ்ச்சிகளை சிறப்பாக அமைத்துத் தந்த மாநாடு மேடை ஒருங்கிணைப்பாளர்கள் திரு.கன்னியப்பன் மற்றும் திரு.மாமுண்டி அவர்களுக்கும், சவுண்ட் சர்வீஸ், சீரியல் லைட் குழுவினர் திரு.சுரேஷ் அவர்களுக்கும், நடனக் குழு கலைஞர்கள், பட்டிமன்றம், இசைக் கச்சேரி நிகழ்ச்சிகளில் பங்கேற்று மாநாட்டை மிகப் பிரமாண்டமாக மாற்றிய அனைவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். தேமுதிகவின் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.O வெற்றி பெற்றதற்கு தொலைபேசி மூலமாகவும், சமூக ஊடகங்களிலும் வாழ்த்துக்கள் தெரிவித்த அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சகோதரர்கள், நண்பர்கள் அனைவருக்கும் கேப்டன் சார்பாகவும், எனது சார்பாகவும், தேமுதிக சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த எல்லா புகழும் கேப்டனுக்கே, எல்லா புகழும் கேப்டனுக்கே, எல்லா புகழும் கேப்டனுக்கே.




