இன்பம் பெருகும், துன்பம் ஒழியும் என்ற நம்பிக்கையுடன் தமிழக மக்கள் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டை வரவேற்று மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இந்த நன்நாளிலிருந்தாவது தங்களின் வாழ்க்கை மேன்மையடையும் என்ற உறுதியான நம்பிக்கையோடு புத்தாண்டை எதிர் நோக்குகின்றனர். ஏழை, எளிய மக்களின் துன்பங்கள் நீங்கி, மகிழ்ச்சியும், ஏற்றமிகு வாழ்வும், வாழ்வில் நம்பிக்கையும், வளர்ச்சியும், எழுச்சியும் ஏற்பட வேண்டும். “இயன்றதை செய்வோம், இல்லாதவர்க்கே” என்ற கொள்கையின் அடிப்படையில், தங்களால் முடிந்த உதவிகளை செய்து உதவ வேண்டும். வரும் 2026 ஆம் ஆண்டு அனைவருக்கும் இன்பம் பொங்கும் ஆண்டாக அமைந்திட வேண்டுமென தேமுதிக சார்பில் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல், தமிழக மக்களுக்கு மிகப்பெரிய வெற்றி ஆண்டாக அமைய வேண்டும். மக்கள் மற்றும் தொண்டர்களின் பேராதரவுடன் தேமுதிக சார்பில் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் நடைபெறவுள்ள “மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0”, கேப்டனின் கனவு லட்சியத்தை வென்றெடுக்கும் மாநாடாக அமையும். இந்த மாநாடு மக்களின் உரிமைகளை மீட்டெடுத்து முக்கிய திருப்புமுனையை உண்டாக்கும் மாநாடாக இருக்கும். அனைவருக்கும் இந்த புத்தாண்டு ஒளிமையமான, வெற்றிகள் நிறைந்த ஆண்டாக அமைய எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.




