உலகமெங்கும் டிசம்பர் 3ஆம் நாள் மாற்றுத் திறனாளிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. நம் உறவினர்களாக வாழும் மாற்றுத் திறனாளிகளுக்கு இயற்கையினால் ஏற்பட்ட குறைபாட்டை நிவர்த்திக்க உதவ வேண்டும் என்பதையே இந்த நாள் நமக்கு உணர்த்துகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு என்று முதன் முதலில் அணியை உருவாக்கி நம்பிக்கையை தந்தவர் நம் தலைவர் கேப்டன். அனைத்து தொழில் துறைகளிலும், அரசு வேலைகளிலும், விளையாட்டுத் துறைகளிலும் (Paralympic) நம்பிக்கையோடும், உறுதியாகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர். மாற்றுத் திறனாளிகள் என்பதால் நம்முடைய இரக்கத்திற்கோ, பரிதாபத்திற்கோ உரியவர்கள் அல்ல. அவர்களும் நம்மில் ஒருவராக அனைத்து உரிமைகளுக்கும், மரியாதைகளுக்கும் தகுதியானவர்கள்.
மனிதர்களுக்கு இயற்கை ஏற்படுத்திய குறைபாட்டை, மனித முயற்சி மூலம் சரி செய்து மாற்றுத் திறனாளிகளும் அனைவரோடும் சரி சமமாக வாழ்வதற்கு அனைத்து உரிமைகளும் இந்த விஞ்ஞான யுகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த அடிப்படையில் தமிழ்நாட்டிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு இருக்கின்ற குறைபாடுகளை ஒவ்வொன்றாக களைந்து, அவர்கள் அத்தகைய குறைபாட்டு உணர்வுகளுக்கு ஆளாகாமல், வாழ்வதற்கு உரிய நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கடந்த 25 ஆண்டுகளில் மாற்றுத் திறனாளிகளுக்காக தேமுதிக சார்பாகப் பல வகையிலும் பல்லாயிரக்கணக்கான பேருக்கு உதவி புரிந்து வருகிறோம். அதே போலச் சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரும் தங்களால் ஆன உதவியைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மாற்றுத் திறனாளிகள் எல்லாவித உயர்வுகளையும் நம்பிக்கையோடு பெற்று வாழ தே.மு.தி.க. சார்பில் இந்த நாளில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.




