தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்தில் 5 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன். சிறுவர்கள் உட்பட பலர் பலத்தகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். மேலும் இதுபோல் தனியார் பேருந்துகள் அதிக வேகமாக சென்று விபத்துக்களை ஏற்படுத்துவது L160 இடங்களில் வாடிக்கையாக நிகழ்கிறது. அதிக வேகம் விபத்து என்று தெரிந்தும் தனியார் பேருந்துகள் வேகமாக இயக்குவது கண்டிக்கத்தக்க செயல். இனிமேல் இது போன்ற விபத்துகள் ஏற்படாமல் இருக்க தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்து பேருந்துகளை இயக்க அனுமதி வழங்க வேண்டும் என தேமுதிக சார்பாக வலியுறுத்துகிறோம். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு தொகையை விபத்து ஏற்படுத்திய தனியார் பேருந்து உரிமையாளர்கள் வழங்க வேண்டும். அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.




