டெல்லி செங்கோட்டை அருகே சுமார் 8 மணியளவில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் இதுவரையில் 8 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தாகவும், ஏராளமானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதும் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இந்தியாவின் தலைநகரான டெல்லியில் குண்டுவெடிப்பை நிகழ்த்தி வெறியாட்டத்தைத் தொடங்கியவர்கள் யார் என்பதை உடனடியாகப் புலனாய்வு செய்து அறிய வேண்டும். இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை அலசி ஆராய வேண்டும். இந்தச் செயலைச் செய்தது யார்? இது தீவிரவாத தாக்குதலா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பதை மத்திய அரசு உடனடியாகக் கண்டறிய வேண்டும். இந்தக் கோழைத்தனமான தாக்குதல் எதன் பொருட்டும் நியாயப்படுத்த முடியாததாகும், இத்தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும், அதே வேளையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.




