விருதுநகர் மாவட்டம், HR & CE கோவிலில் நடந்த கொள்ளை முயற்சியில் இரு பாதுகாவலர்கள் (2 பேர்) கொடூரமாக குத்தி கொல்லப்பட்ட சம்பவம், தமிழகம் முழுவதும் நிகழும் படுகொலைகளின் தொடர்ச்சியாக, மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யார் இந்த கொலையை செய்தார்களோ அவர்களை உடனடியாகக் கண்டுபிடித்து அவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கிட வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை, வீட்டில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அவர்களின் ஆன்மா சாந்தி அடையவும், குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் தேமுதிக சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழகம் முழுவதும் காவல்துறை எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இல்லையெனில், இதுபோல மக்கள் பாதுகாப்பின்மை என்பது ஒரு தொடர் கதையாக நிகழ்ந்து கொண்டே இருக்கும்.




