தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக இளைஞரணி செயலாளர் திரு.வி.பி.விஜய் பிரபாகர் அவர்கள் இன்று (30.10.2025) இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள தெய்வத் திருமகனார் முத்துராமலிங்க தேவரின் 63வது குருபூஜை முன்னிட்டு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் உடன் கழக நிர்வாகிகள், இராமநாதபுரம் மாவட்ட கழகச் செயலாளர் திரு.சிங்கை ஜின்னா அவர்கள், சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் திரு.திருவேங்கடம் அவர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றியம் கழக நிர்வாகிகள், நகரம் கழக நிர்வாகிகள், பகுதி கழக நிர்வாகிகள், பேரூர் கழக நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.









