கரூர் மாவட்டத்தில், தவெக தலைவர் விஜய் பரப்புரையில் கலந்துகொண்ட பொதுமக்கள் இதுவரை 29 பேர் உயிரிழந்த செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. 40க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்ற ஒரு வேதனையான செய்தி வந்து கொண்டிருக்கிறது. இது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இந்த அளவிற்கு மக்கள் உயிர் பலியாகியிருப்பது மிகப்பெரிய ஒரு துயரமான சம்பவம். தமிழ்நாட்டில் இன்று கருப்பு நாளாக நாம் பார்க்க வேண்டி இருக்கிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து விரைவில் குணமடைய வேண்டுமென்று பிரார்த்திக்கிறோம். உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், அவர்களை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் தேமுதிக சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
