தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், கழக பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்கள், தியாகி ஐயா இமானுவேல் சேகரன் அவர்களின் 68 வது நினைவு நாளில் இன்று (11.09.2025) இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்திற்கு நேரில் சென்று மலர் தூவி மறியாதை செலுத்தினார்கள். உடன் மண்டலப் பொறுப்பாளர், கழக துணைச் செயலாளர் திரு.எம்.ஆர்.பன்னீர்செல்வம் அவர்கள், இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் திரு.சிங்கை.ஜின்னா அவர்கள், மண்டலப் துணைப் பொறுப்பாளர்கள், கழக அணி நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், ஒன்றியம், நகரம், பேரூர், வார்டு, ஊராட்சி, கிளை கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.








