நபிகள் நாயகம் பிறந்த புனித நாளை மிலாடி நபியாக இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் கடைப்பிடிக்கிறார்கள். “இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் பார்க்கிறார்” என்றார் நபிகள் நாயகம். இந்த புனித நாளில் அனைவருக்கும் அன்பும், மகிழ்ச்சியும் பெருகட்டும். அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு தேமுதிக சார்பாக மிலாடி நபி வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.
கேரளாவின் பாரம்பரிய பண்டிகைகளில் மிகவும் முக்கியமானது ஓணம் பண்டிகை. இந்நாளில் ஒற்றுமையையும், செழிப்பையும், கலாச்சாரத்தையும் போற்றும் வகையில் அனைத்து கேரள மக்களுக்கும் தேமுதிக சார்பாக ஓணம் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
