இந்திய விடுதலைப் போராட்டத் தியாகி வ.உ.சிதம்பரனாரின் 154வது பிறந்தநாள் இன்று (05.09.2025) மிக பெரிய செல்வந்தாராக பிறந்து நாட்டினுடைய சுதந்திரத்திற்காக போராடி செக்கிழுத்த செம்மல். இந்திய விடுதலை போராட்டத்தில் ஆங்கிலேயர்களை மிக கடுமையாக எதிர்த்த தலைவர்களில் மிக முக்கியமானவர், பட்டப்படிப்பையும், சட்டப்படிப்பையும் படித்து தேர்ந்தவர், மிக சிறந்த வழக்கறிஞராக உருவெடுத்து ஏழை மக்களுக்கு இலவசமாக வாதிட்டவர். சுதந்திரத்திற்காக போராடி செக்கிழுத்து வெள்ளையர்களை வெளியேறு என்று மாபெரும் போராட்டத்தை நடத்தி, சுதந்திரம் வாங்கி கொடுத்த மாமனிதர். நாட்டிற்கு பெருமை சேர்த்தவர், கப்பலோட்டிய தமிழர் அவரின் பிறந்தநாளில் இன்று அவரை போற்றுவோம், புகழ்வோம், வணங்குவோம். அவருடைய தியாகம் இவ்வுலகம் இருக்கும் வரை நிலைத்துநிற்கும். தேமுதிக சார்பாக வ.உ.சி யின் புகழை போற்றி வணங்கிறோம்.
