Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • சடையநேரி கால்வாய்க்கு தண்ணீர் திறக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

சடையநேரி கால்வாய்க்கு தண்ணீர் திறக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

தூத்துக்குடி மாவட்டம்மணிமுத்தாறுபாபநாசம் அணைகளில் போதிய நீர் இருந்தும் அந்த அணைகளிலிருந்து திறக்கப்படும் உபரி நீர் தாமிரபரணி ஆற்று வழியாக ஸ்ரீ வைகுண்டம் வந்தடைகிறது. ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து அந்த நீர் வீணாக கடலில் கலக்க திறந்து விடப்படுகிறதுபல வருடங்களுக்கு முன்பாக சாத்தான்குளம், உடன்குடி போன்ற பகுதிகள் வறட்சியின் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள். அந்த சமயத்தில் அனைத்து கட்சிகளும், விவசாய மக்களுக்கும் ஒன்று திரண்டு போராடி சாத்தான்குளம், உடன்குடி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு இன்று வரை தாகம் தணிந்து வந்தார்கள். அதைப் போல சடையநேரி கால்வாய்க்கு தண்ணீர் திறந்து, வறண்டு கிடக்கும் சாத்தான்குளம், உடன்குடி பகுதி விவசாய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும். வீணாக கடலில் கலக்க திறக்கப்படும் தண்ணீர், அந்தப் பகுதி விவசாயிகளுக்கு திறந்து விட பலமுறை கோரிக்கை வைத்தும் கண்டுகொள்ளாத நீர்வளத்துறையையும், பொதுப்பணித் துறையை வன்மையாக கண்டிக்கிறோம். வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள சாத்தான்குளம், உடன்குடி விவசாயிகளின் இந்த நிலைமை மாற வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மழை பெய்து வெள்ளத்தால் பழுதடைந்த ஆத்தூர் பாலத்தை உடனடியாக சரி செய்ய வேண்டும். விவசாயிகளின் நலனையும், இந்த பகுதி மக்களின் கோரிக்கைக்கும் தமிழக அரசு செவிசாய்த்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக சார்பாக வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

Releated Posts

LIC பெண் அதிகாரி கல்யாணி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டி அறிக்கை

மதுரை மேலவெளி வீதியில், ரயில் நிலையம் எதிரில் அமைந்துள்ள இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக (LIC) கட்டிடத்தின் அலுவலகத்தில், 20.12.2025 அன்று இரவு ஏற்பட்ட…

ByBySenthil KumarJan 21, 2026

முன்னாள் கழக தொண்டர் அணி செயலாளரும், கழக தேர்தல் பணிக்குழு செயலாளருமான திரு.S.கணேசன் அவர்களின் மறைவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக பொதுச் செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள், கழக முன்னாள் தொண்டர் அணி செயலாளரும், கழக தேர்தல்…

ByBySenthil KumarJan 19, 2026

தேமுதிக – பத்திரிக்கை செய்தி – 17.01.2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், புரட்சி அண்ணியார், கழக பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (17.01.2026) தலைமை கழகத்தில் (கேப்டன் ஆலயம்)…

ByBySenthil KumarJan 17, 2026

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு வாழ்த்துச் செய்தி

“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற நம்பிக்கையுடன், தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கும் என்ற உறுதியோடு, தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை நாம் அனைவரும்…

ByBySenthil KumarJan 14, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...