சமுதாயத்தில் சரிபாதி அங்கமாக பெண்கள் திகழ்கிறார்கள். பெண்கள் தாயாகவும், தாரமாகவும், சகோதரிகளா இருந்து, தொண்டுக்கும், தியாகத்திற்கும் இலக்கணமாக தங்கள் வாழ்வை அர்பணித்து கொள்கிறார்கள். அவர்கள் முன்னேற வேண்டுமென்றால் அதற்குரிய தகுதிகளை பெற சமூகம், அரசியல், பொருளாதாரம் இவை அனைத்திலும் அவர்கள் முழு பங்குபெற வேண்டும். மனித இனத்தை பாதுகாப்பது தாய்க்குலங்களே, அந்த தாய்குலங்களை போற்றும் வகையில் அவர்கள் நலன் கருதி கொண்டாடப்படுவதே உலக மகளிர் தினம் ஆகும். ஆண்களுக்கு, பெண்கள் அடிமையில்லை, பெண்களுக்கு, ஆண்கள் அடிமையில்லை. இருபாலரும் ஒருசேர நட்புணர்வோடு புரிதல்கள் இருக்கவேண்டும் என்பதே முன்னோர்கள் காட்டிய வழியாகும். ஆண், பெண் உறவு நட்பின் அடிப்படையில் அமைகிறபொழுது, வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களை இன்றைய காலகட்டத்தில் இருபாலரும் ஒரு சேர சமாளிக்க வேண்டியுள்ளது.
தேமுதிக சார்பாக இதுவரைக்கும் பல திட்டங்களை பெண்களுக்காக கழகத்தின் மூலமாக செய்யப்படுள்ளது. அவற்றில் “பெண்கள் நாட்டின் கண்கள்” என்கிற உன்னத திட்டத்தை தனிகட்சியாக செய்து அதை சரித்திர சாதனையாக மாற்றியது தேமுதிக. அதேபோல பெண்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் தையல் இயந்திரம், சிறு கடைகள் வைத்துக்கொடுப்பது, கணினி பயிற்சி மையம், கல்வி உதவி, திருமண உதவி, மருத்துவ உதவி இதுபோன்று பலதரப்பட்ட வகையில் பெண்களுக்கு உதவிகரம் புரிந்துள்ளது தேமுதிக. அதுபோன்று பெண்களுக்கென்று கழகத்தில் மகளிர் அணியை உருவாக்கி அவர்களுக்கு என்று தனி சீருடை அமைத்து அரசியலில் சமபங்கு அளித்த ஒரே கழகம் தேமுதிக. எனவே பெண்களை கவுரவப்படுத்தும் வகையில் என்றைக்கும் தேமுதிக இருக்கும். பாலியல் வன்கொடுமை, வரதட்சணை கொடுமை பெண்களை இழிவாக நடத்துவது போன்ற செயல்களை இரும்புக்கரம் கொண்டு தடுத்து பெண் இனத்தைக் காப்பாற்ற வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. இந்த உலக மகளிர் தினத்தில் அனைத்து நலமும், வளமும் பெற்று வாழ தேமுதிக சார்பில் எனது இதயமார்ந்த உலக மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.


