Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குத் தமிழக அரசு நிவாரண தொகை அறிவித்ததற்கு வரவேற்பு தெரிவித்து  அறிக்கை

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குத் தமிழக அரசு நிவாரண தொகை அறிவித்ததற்கு வரவேற்பு தெரிவித்து  அறிக்கை

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாய பெருமக்களுக்குத் தமிழக அரசு நிவாரணத் தொகை அறிவித்தது வரவேற்கத்தக்கது. மொத்தம் 5,18,783 விவசாயிகள் பயன்பெறும் வகையில் 498.80 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாகத் தமிழக அரசு அறிவித்து ஓரிரு நாளில் அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும் என்ற அறிவிப்பு ஒட்டுமொத்த விவசாய பெருமக்களின் வயிற்றில் பால்வார்க்கும் ஒரு செய்தி. தொடர்ந்து ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளையும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளையும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின்  சார்பாக விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை போன்ற பகுதிகளில் நேரடியாகச் சென்று பார்வையிட்டு தமிழக அரசிடம் நிவாரணத் தொகையை கட்டாயம் வழங்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி இருக்கிறோம். அந்த வகையில் தமிழக அரசு இன்றைக்கு நமது கோரிக்கைக்குச் செவி சாய்த்து ஒட்டுமொத்த டெல்டா பகுதி விவசாயிகளுக்கு ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரணத் தொகை வழங்க இருப்பது பெரும் மகிழ்ச்சியான செய்தியாக இருக்கிறது. எனவே அந்த நிவாரண தொகையைக் காலதாமதம் இல்லாமல் விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்குச் செலுத்தி விவசாயிகளின் துயர் துடைத்துப் பாதிக்கப்பட்ட விவசாய பெருமக்களுக்குப் பாதுகாப்பாகவும், பக்கபலமாகவும் தமிழக அரசு இருக்க வேண்டும். எனவே இது விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி தமிழக அரசிற்கு தேமுதிக சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Releated Posts

தேமுதிக கழக நிர்வாகிகள் மற்றும் கழக சார்பு அணி நிர்வாகிகள் அறிமுக ஆலோசனை கூட்டம் பத்திரிக்கை செய்தி: – 07.05.2025

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையில் இன்று (07.05.2025) காலை 11 மணிக்கு கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில்…

ByBySenthil KumarMay 7, 2025

தேமுதிக மே தின விழா பத்திரிக்கை செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (01.05.2025) காலை 11 மணிக்கு கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் மே…

ByBySenthil KumarMay 1, 2025

தேமுதிக மே தின வாழ்த்து செய்தி

ஜாதி, மதம், இனம், மொழி, நிறம் என்ற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, மனித குலம் முழுவதும் கொண்டாடும் நாள் மே தினமாகும். உலகெங்கிலும் உள்ள உழைக்கும்…

ByBySenthil KumarApr 30, 2025

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 19 வது தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 19 வது தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கழக பொதுச் செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள்…

ByBySenthil KumarApr 30, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...