தமிழகத்தில் மின்சாரத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும், தொழிற்சாலையின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆனால் மின்வாரியத்தில் 24 ஆயிரம் கள உதவியாளர்களும், 10 ஆயிரம் வயர் மேன் களுக்கான பணியிடங்களும் காலியாக உள்ளது. வடகிழக்கு பருவ மழை துவங்கும் இந்த நேரத்தில் மின்சார பிரச்சனைகள் உருவாகும். தொழிலாளர்களின் பற்றாக்குறையை ஈடு செய்வதற்கு வயர் மேன், கள உதவியாளர், கேங்மேன் ஆகிய மூவர்களின் மீது கூடுதல் பணி சுமை விழுகிறது. வயர் மேன் ஒருவர் நான்கு பகுதிகளை சரி செய்யக்கூடிய அளவுக்கு பணி சுமை கொடுக்கப்படுகிறது. மழைக்காலத்தில் ஓர் பகுதியில் மின் தடையை சரி செய்து கொண்டிருக்கும் பொழுதே, மற்றொரு பகுதியில் மின்தடை ஏற்படுகிறது. இப்படிப்பட்ட நேரங்களில் இதை சரி செய்து விட்டுத் தான் அந்தப் பகுதிக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் அந்தப் பகுதிகளில் நீண்ட நேரம் மின்சாரம் இல்லாத சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும் மரங்கள் சாய்வதனால் மின் வயர்கள் ஆங்காங்கே துண்டிக்கப்படுகிறது. அதையும் சரி செய்வதற்கு இவர்கள் தான் செல்ல வேண்டும். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழல் நிலவுகிறது. குறைந்த பணியாளர்களைக் கொண்டு இந்த வடகிழக்கு பருவ மழையை சரி செய்து சமாளித்து விடலாம் என அரசு எண்ணாமல், கேங்மேன்களாக பணி புரியக்கூடிய தொழிலாளர்களை கள உதவியாளராக அறிவித்து, ஏற்கனவே தேர்ச்சி பெற்ற ஐந்தாயிரம் கேங்மேன் களையும் பணியில் அமர்த்தி, ஒப்பந்த பணியாளர்களாக பணி புரியக்கூடிய தொழிலாளர்களை வயர் மேன் களாகவும், கள உதவியாளராகவும் நியமனம் செய்து, உடனடியாக பொதுமக்கள் மின்தடையால் பாதிக்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டியது ஒரு நல்ல அரசின் கடமையாகும். மேலும் மழை நேரங்களில் மின் ஊழியர்களின் உயிர் இழப்புகளை தடுப்பதற்கு பாதுகாப்பு உபகரணங்கள் ஒரு செட் பிரிவு அலுவலகத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. இது மின்தடை ஏற்பட்டுள்ள பகுதியில் மின்கசிவு உள்ளதா என பார்ப்பதற்கு மட்டும் தான் பயன்படுத்த இயலும், மற்ற மின் ஊழியர்கள் நேரடியாக சென்று மின் பாதையை சரி செய்யும் போது உயிரிழப்புகள் ஏற்படுகிறது. எனவே உயிரிழப்பை தவிர்ப்பதற்கு ஒவ்வொரு பிரிவு அலுவலகத்திற்கும் குறைந்தது மூன்று செட் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். மேலும் பருவ மழைக்காலத்தை மின்வாரியம் எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படாத வண்ணம் சுமூகமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என இந்த அரசை தேமுதிக சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
வடகிழக்கு பருவ மழையை மின்வாரியம் எப்படி சமாளிக்கப் போகிறது என்பது குறித்த அறிக்கை
Releated Posts
கொலை, கொலையா தமிழகத்தில் படுகொலைகள் நடப்பதைக் கண்டித்து அறிக்கை
நெல்லையில் நீதிமன்ற வாசலிலேயே இளைஞர் படுகொலை செய்யப்பட்டது தமிழகத்தையே இன்றைக்கு உலுக்கி இருக்கிறது. முன் விரோதம் காரணமாக இந்த படுகொலை செய்யப்பட்டதா அல்லது வேறு…
மேட்டூர் அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து தனி ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டி அறிக்கை
பழைய அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 4 யூனிட்டுகளுடன் செயல்பட்டு வருகின்றது. இதில் 3வது யூனிட்டுக்கு…
அரசு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (17.12.2024) பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து ஓய்வு பெற்ற ஊழியர்கள் சம்பளம் மற்றும்…
திரு.இ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் மறைவிற்கு இரங்கல் செய்தி
முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர், ஈரோடு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு.இ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் உடல் நலக்குறைவால் இன்று (14.12.2024) இயற்கை எய்தினார் என்ற…