Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • சென்னை கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியில் பாதுகாப்பு தர தவறிய தமிழக அரசை கண்டித்து அறிக்கை

சென்னை கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியில் பாதுகாப்பு தர தவறிய தமிழக அரசை கண்டித்து அறிக்கை

சென்னை கடற்கரையில் விமான சாகச நிகழ்வு சாவு நிகழ்வாக மாறியது கண்டனத்துக்கு உரியது. தமிழக முதல்வர் அவர்களும், தமிழக அரசும் ஒரு மாதமாகவே 15 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த விமான சாகச நிகழ்ச்சி பார்க்க வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்கள். அதை நம்பி மக்களும் வந்து விட்டனர். ஆனால் அங்கு எந்தவித பாதுகாப்பு முன்ஏற்பாடுகள் செய்யாமல் 5 உயிர்கள் பலியாகி இருக்கிறது. அதுபோல நூற்றுக்கணக்கானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிகழ்வு அரசினுடைய நிர்வாக சீர்கேட்டிற்கு முன்னுதாரணமாக அமைந்துவிட்டது. உலகமே வியக்க கூடிய அளவு விமானப்படையினர் சாகச நிகழ்வை மிகச் சிறப்பாக செய்து முடித்துள்ளனர். ஆனால் பாதுகாப்பு தர வேண்டிய தமிழக அரசு எந்தவித பாதுகாப்பும் செய்யாமல் தவறவிட்டது கண்டனத்துக்கு உரியது. மக்கள் நேற்று 5 மணி நேரத்திற்கும் அதிகமாக மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். சரியான போக்குவரத்து வசதி, குடிநீர், கழிவறை மற்றும் அவசர மருத்துவ உதவி போன்ற எந்தவித வசதிகளும் முறையாக செய்யப்படவில்லை. வயதானோர், கர்ப்பிணிகள், மருத்துவ பிரச்சனை உள்ளவர்கள் இந்த சாகச நிகழ்வை பார்க்க வருவதை தவிர்க்க வேண்டி அறிவுறுத்தி இருக்க வேண்டும். ஆம்புலன்களையும், குடிதண்ணீர் லாரிகளையும் 100 அடிக்கு ஒரு இடத்தில் நிறுத்தி இருக்க வேண்டும்.  அதைபோல் ரயில்களையும், போக்குவரத்தையும் திட்டமிட்டு செயல் படுத்தியிருக்க வேண்டும். காவல்துறையினர் செய்வதறியாது மிகவும் கஷ்டத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி வாக்களித்து அவதிப்பட்டு கொண்டு இருக்கும் மக்கள், தமிழக அரசின் விமான சாகச நிகழ்வை காண வந்தும் ஏமாற்றம் அடைந்திருக்கின்றனர். மக்கள் கடும் அவதிக்கு உள்ளாக்கப்பட்டதற்கு தமிழக அரசு முழு பொறுப்பேற்க வேண்டும். அரசு அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் தங்களுக்கு மட்டும் எல்லா வசதிகளையும் ஏற்படுத்திக்கொண்டும் கருப்பு கண்ணாடி போட்டு கொண்டும் இருந்ததனாலோ என்னவோ மக்களின் கஷ்டம் அவர்களின் கண்களுக்கு தெரியாமல் போய்விட்டதோ?. தமிழக அரசு இறந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். தேமுதிக சார்பில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறோம்.

Releated Posts

முன்னாள் பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் திரு.K.அண்ணாமலை அவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கழகப் பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்களின் தாயார் திருமதி.K.அம்சவேணி கண்ணையா அவர்கள் திருவுருவப் படத்திற்கு…

ByBySenthil KumarOct 9, 2025

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர்திருமதி.பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கழகப் பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்களின் தாயார் திருமதி.K.அம்சவேணி கண்ணையா அவர்கள் மறைவிற்கு நேரிலும், தொலைபேசியிலும், சமூக வலைத்தளங்களின் மூலம் அஞ்சலிசெலுத்திய அனைவருக்கும் நன்றி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கழகப் பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்களின் தாயார் திருமதி.K.அம்சவேணி கண்ணையா அவர்கள் மறைவிற்கு தொலைப்பேசியில்…

ByBySenthil KumarOct 9, 2025

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை காணாத கரூர் அரசியல் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல்  அறிக்கை 

கரூர் மாவட்டத்தில், தவெக தலைவர் விஜய் பரப்புரையில் கலந்துகொண்ட பொதுமக்கள் இதுவரை 29 பேர் உயிரிழந்த செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. 40க்கும் மேற்பட்டவர்கள்…

ByBySenthil KumarSep 30, 2025

கோவை கோட்டைபாளையம் தனியார் காப்பகத்தில் குழந்தைகளுக்கு நடந்த கொடுமை தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை  

கோவை மாவட்டம், சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்தின் கோட்டைபாளையம் பகுதியில் இயங்கும் “கிரேஸ் ஹேப்பி ஹோம் டிரஸ்ட்” என்ற தனியார் குழந்தைகள் காப்பகத்தில் பணிபுரியும் ஊழியர்…

ByBySenthil KumarSep 30, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...