Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • வானூர் இன்டர் நேசனல் பேக்கரி ப்ராடக்ட் நிறுவனத்தின் செயல்பாடு குறித்து கண்டன அறிக்கை

வானூர் இன்டர் நேசனல் பேக்கரி ப்ராடக்ட் நிறுவனத்தின் செயல்பாடு குறித்து கண்டன அறிக்கை

விழுப்புரம் மாவட்டம், வானூர் பகுதியில் இன்டர்நேஷனல் பேக்கரி ப்ராடக்ட் என்ற நிறுவனத்தில் தேசிய முற்போக்கு இன்டர்நேஷனல் பேக்கரி ப்ராடக்ட் லிமிடெட் தொழிலாளர் சங்கம் செயல்பட்டு வருகிறது. இன்டர்நேஷனல் பேக்கரி ப்ராடக்ட் நிறுவனத்தில் அதிகாரிகள் இச்சங்கத்தை முடக்கும் விதத்தில் ID ACT (2 ra) விதிகளுக்கு புறம்பாகவும், ID ACT 9A போன்ற விதிகளை புறக்கணித்தும், கீழ்கண்ட எங்கள் சங்கத்தின் நிர்வாகிகளையும், உறுப்பினர்களையும் பணி நீக்கம் செய்துள்ளார்கள். திருவாளர்கள் 1.S.ஜெயாங்கர் (செயலாளர்) 2.S.சுரேஷ் 3.E.தசரதன் 4.K.அய்யப்பன் 5.K.விஜய் 6.K.தட்சிணாமூர்த்தி 7.M.வீரப்பன் 8.S.விரசேகர் 9.திருமதி.K.பொன்னம்மாள் இவர்கள் அனைவரையும் பணியில் இருந்து நீக்கிய உள்ளார்கள். பணி நீக்கம் செய்யப்பட்ட செயலாளர் திரு.S.ஜெய்சங்கர் அவர்களை விசாரணை நிலுவையில் இருக்கும் போது, விதி ID ACT 9A க்கு புறம்பாக, நீக்கப்பட்ட தவறை கண்டித்து நிலுவை சம்பளத்துடன் பணி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டும், அவரை பணியில் சேர்க்கவில்லை.

மேலும் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறை 13.07.2023, 31.07.2023 மற்றும் 30.08.2023 ஆகிய தேதிகளில் அறுவை சிகிச்சை நிபுணர் உடல் பரிசோதனை நடத்திய மருத்துவர் அவரது அறிக்கையில் திரு.S.ஜெயசங்கர் செயலாளர் அவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டு நியாயமற்றது என்று சொல்லி, அவரை பணியிலிருந்து நீக்கப்பட்ட தேதியில் இருந்து சம்பளத்துடன் மீண்டும் பணியமர்த்த உத்தரவிட்டும், அதையும் புறக்கணித்துள்ளார்கள். இதற்கு முக்கிய காரணம் உங்களிடம் தொடர்ந்து பணியாற்றி வந்த 350 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 1997 ஆம் ஆண்டு முதல் 2014 வரை சுமார் 17 வருடங்களாக EPF, ESI போன்றவை பிடித்தம் செய்து, நிறுவனத்தின் பங்களிப்பை செலுத்தாமல் மோசடி செய்துள்ளார்கள். பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நியாமான ஊதியம் வழங்காமலும், ஒப்பந்த தொழிலாளர்களை உரிய காலத்தில் நிரந்தரம் செய்யாதது, சாதி அடிப்படையில் தொழிலாளர்களை கழிவுகளை அல்ல சொல்வது, தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை செருப்பால் அடிப்பது போன்றவற்றை எங்கள் தொழிற்சங்கம் சார்பாக போராடியதற்காக எங்கள் சங்கத்தினரை பழி வாங்கியுள்ளார்கள். இதற்கு மேற்கண்ட தொழிலாளர் துறை, சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறை நடத்திய விசாரணையே சான்றாகும். இது தொடர்பாக காவல் துறையோடு சமாதான பேச்சுவார்த்தை, வருவாய் துறையுடன் பேச்சுவார்த்தை என அனைத்தையும் ஏற்க மறுத்த இந்நிறுவனத்தின் அராஜக போக்கை வன்மையாக கண்டிக்கிறேன். இப்பிரச்சினைகள் அனைத்தையும் 15 தினங்களுக்குள் சீர்படுத்தி எல்லோரையும் பணியில் அமர்த்த வேண்டும் என தேமுதிக சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

Releated Posts

மாநகராட்சியின் அலட்சியத்தால் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு நிவாரணம் நிதி வழங்க வேண்டி அறிக்கை

சென்னை திருவொற்றியூரில் தாங்கல் பீர் பயில்வான் தர்கா ரோடு பகுதியில் மின்சாரம் தாக்கி 12ஆம் வகுப்பு பள்ளி மாணவன் திரு.நஃபில் உயிரிழந்துள்ளார். டியூஷன் (Tuition)…

ByBySenthil KumarJul 3, 2025

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் உலக மருத்துவர்கள் தின வாழ்த்துக்கள்

மருத்துவர்களின்  வரலாற்றில்,   மறக்க    முடியாத     நாள்   இன்று (01-07-2025) மருத்துவர்கள் தினம்! மருத்துவத்துறையில் முன்மாதிரியான மாநிலமாகத் திகழும் நமது தமிழ்நாட்டில், அரசு மருத்துவர்களுக்குக் குறைவான…

ByBySenthil KumarJul 1, 2025

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டு மரணமடைந்ததை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டு மரணமடைந்ததை கண்டித்து வரும் (05.07.2025) சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வெள்ளிச் சந்தை திடலில் சனிக்கிழமை…

ByBySenthil KumarJul 1, 2025

“மா” (மாம்பழம்) விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

“மா” (மாம்பழம்) விளைச்சல் செய்யும் விவசாயிகளுக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. தமிழக அரசை கண்டித்து வரும் (30.06.2025) திங்கள் கிழமை காலை 10 மணியளவில் கிருஷ்ணகிரி புதிய…

ByBySenthil KumarJun 23, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...