பழைய அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 4 யூனிட்டுகளுடன் செயல்பட்டு வருகின்றது. இதில் 3வது யூனிட்டுக்கு நிலக்கரியை கன்வேயர் பெல்ட் மூலம் அனுப்பி வைக்கப்படும் ‘பங்கர் டாப்’ எனப்படும் பகுதி நிலக்கரியை, அரவைக்கு முன்பு சேகரிக்கும் இடம் தரை மட்டத்தில் இருந்து சுமார் 100 அடிக்கு மேல் உள்ளது. நேற்று மாலையில் திடீரென பங்கர் டாப், அந்த அமைப்புடன் சரிந்து கீழே விழுந்துள்ளது. 350 டன் நிலக்கரி குவியல் கொட்டியதில் 2 தொழிலாளர்கள் உடல் நசுங்கிப் பலியானார்கள், மேலும் 5 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். அடிக்கடி இதுபோன்ற விபத்துகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. ஒப்பந்த தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பும், பாதுகாப்பு உபகரணங்களும் இந்த அரசு செய்வது இல்லை. அவர்கள் மிக உயரமான இடத்திலிருந்து வேலை செய்யும் போது, நிலக்கரியில் சரிவுகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும், காயங்களும் ஏற்படுகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் அங்கு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. எனவே இந்த அரசு தனி கவனம் செலுத்த வேண்டும். இந்த விபத்திற்கான காரணம் நிர்வாக சீர்கேடு, 40 கோடிக்கு மேல் ஊழல் புகார் இருக்கின்றது. எனவே இந்த விபத்து குறித்தும், மரணங்கள் குறித்தும் தனி ஆணையம் அமைத்து முறையாக விசாரணை செய்ய வேண்டும். இந்த விபத்தை நாம் சாதாரணமாக கடந்து போக முடியாது, பல ஆண்டுகளாக பலமுறை முறையிட்டும் யாரும் அதை செவி சாய்க்காததினால், மாபெரும் விபத்து ஏற்பட்டு தொழிலாளர்கள் உயிரிழந்து பாதிக்கப்பட்டு உள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஒப்பந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மேலும் உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத வண்ணம் இந்த அரசு தனி கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். உயிரிழந்தவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி, அவர்களின் குடும்பத்தாருக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேட்டூர் அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து தனி ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டி அறிக்கை
Releated Posts
கொலை, கொலையா தமிழகத்தில் படுகொலைகள் நடப்பதைக் கண்டித்து அறிக்கை
நெல்லையில் நீதிமன்ற வாசலிலேயே இளைஞர் படுகொலை செய்யப்பட்டது தமிழகத்தையே இன்றைக்கு உலுக்கி இருக்கிறது. முன் விரோதம் காரணமாக இந்த படுகொலை செய்யப்பட்டதா அல்லது வேறு…
அரசு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (17.12.2024) பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து ஓய்வு பெற்ற ஊழியர்கள் சம்பளம் மற்றும்…
திரு.இ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் மறைவிற்கு இரங்கல் செய்தி
முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர், ஈரோடு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு.இ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் உடல் நலக்குறைவால் இன்று (14.12.2024) இயற்கை எய்தினார் என்ற…
பகுதி நேர ஆசிரியர்களின் கைதை கண்டித்து அறிக்கை
பகுதி நேர ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக தங்களுடைய உரிமைக்கான போராட்டத்தை முன் நிறுத்தி வருகின்றனர். ஆளும் திமுக அரசு, கொடுத்த வாக்குறுதிப்படி ஆட்சிக்கு வந்தவுடன்…