Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • முள்ளக்காடு கப்பல் கட்டும் திட்டத்தை ரத்து செய்து உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசை வலியுறுத்தி அறிக்கை

முள்ளக்காடு கப்பல் கட்டும் திட்டத்தை ரத்து செய்து உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசை வலியுறுத்தி அறிக்கை

கோவளம், பசுவந்தரை, தன்பாடு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் செயல்பட்டு வரும் சிறு உப்பு உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் வகையில் முள்ளக்காடு பகுதியில் கப்பல் கட்டும் தளம் (Shipyard) அமைக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. முல்லைக்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல தலைமுறைகளாக பாரம்பரியமாக நடைபெற்று வரும் உப்பு உற்பத்தித் தொழில், அப்பகுதி மக்களின் முக்கியமான மற்றும் ஒரே வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், அங்குள்ள உப்பளங்கள் அழிக்கப்படும் அபாயம் உருவாகி, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழ்நிலை ஏற்படும். பாரம்பரிய தொழில்களை பாதுகாப்பதும், தொழிலாளர்களின் உரிமைகளை காப்பதும் அரசின் அடிப்படை கடமையாகும். எனவே, முல்லைக்காடு பகுதியில் கப்பல் கட்டும் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் வலியுறுத்துகிறோம். மேலும், அப்பகுதி மக்கள், சிறு உப்பு உற்பத்தியாளர்கள், தொழிலாளர் சங்கங்கள் ஆகியோருடன் அரசு கலந்தாலோசனை நடத்தி, மக்களின் கருத்தை மதிக்கும் ஜனநாயக அணுகுமுறையை பின்பற்ற வேண்டும். தொடர்ந்து உப்பு விலை கடும் வீழ்ச்சி அடைந்து வரும் இந்த நாட்களில், உப்பு உற்பத்தியாளர்களை நம்பி பல லட்சம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. எனவே, இதை கருத்தில் கொண்டு அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை தேமுதிக சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

Releated Posts

மக்களின் அன்றாட வாழ்வை பாதிக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் தமிழகம் முழுவதும் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டுடை கண்டித்து அறிக்கை

நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கமும், விலைவாசி உயர்வும் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மீண்டும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) சிலிண்டரின் விலையை…

ByBySenthil KumarJun 8, 2026

உலக சுற்றுச்சூழல் தின வாழ்த்து அறிக்கை

இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதமான பூமியைக் காப்பது நம் அனைவரின் தலையாய கடமையாகும். ஒவ்வொருவரும் தங்களது மனதில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் உறுதிமொழியை ஏற்க வேண்டும்.…

ByBySenthil KumarJun 5, 2026

காட்டு யானை தாக்குதலில் 14 வயது சிறுவன் பலிபொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசை வலியுறுத்தி அறிக்கை – 03.06.2026

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள பாக்கனா பகுதியில் முடிதிருத்தம் செய்து விட்டு, வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த 14 வயது சிறுவன் மிஸ்ஹாப்…

ByBySenthil KumarJun 3, 2026

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே இரு வேறு பகுதியில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து அறிக்கை

  நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் அடுத்தடுத்து சிறுமிகள் பாலியல் தொல்லை மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவங்கள் தமிழக மக்களை மிகுந்த அதிர்ச்சியிலும்…

ByBySenthil KumarJun 2, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...