“அதானி குழுமத்திற்கும், தமிழக அரசுக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளில் எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை” “மின்வாரியம் தொடர்பாக எந்தவித ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை” “சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரவி வருகிறது” “இது தொடர்பாக என்னிடம் நேரடியாகவோ அல்லது மின் துறை அதிகாரிகளுடனோ கேட்டு தெரிந்துகொண்ட பிறகே பதிவிட வேண்டும்” என்று சொல்லும் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள், இதுபோன்ற ஊழல் குற்றச்சாட்டை மறைத்தாலும், இதன் உண்மை நிலை என்ன என்பதை தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். அதுமட்டுமல்லாமல் நீதியரசர்களும் தாமாக முன்வந்து இந்த ஊழல் குற்றச்சாட்டை ஆய்வு செய்து, உண்மையில் ஊழல் நடந்திருக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும். அமெரிக்கா நீதிமன்றம் அதானி குழுமத்தின் மீது குற்றம்சாட்டி இருக்கிறார்கள் என்றால் “நெருப்பில்லாமல் புகையாது” என்கின்ற பழமொழிக்கு ஏற்ப, புகாரும், ஊழல் குற்றச்சாட்டும் வரவேண்டியதன் அவசியம் என்ன? என்பது மக்கள் கேள்வியாக உள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக இதற்கான விளக்கத்தை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
மின்வாரியம் தொடர்பான எவ்வித ஒப்பந்தமும் அதானி குழுமத்துடன் செய்யப்படவில்லை என்ற அமைச்சரின் கருத்துக்கு, தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டி அறிக்கை
Releated Posts
கொலை, கொலையா தமிழகத்தில் படுகொலைகள் நடப்பதைக் கண்டித்து அறிக்கை
நெல்லையில் நீதிமன்ற வாசலிலேயே இளைஞர் படுகொலை செய்யப்பட்டது தமிழகத்தையே இன்றைக்கு உலுக்கி இருக்கிறது. முன் விரோதம் காரணமாக இந்த படுகொலை செய்யப்பட்டதா அல்லது வேறு…
மேட்டூர் அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து தனி ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டி அறிக்கை
பழைய அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 4 யூனிட்டுகளுடன் செயல்பட்டு வருகின்றது. இதில் 3வது யூனிட்டுக்கு…
அரசு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (17.12.2024) பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து ஓய்வு பெற்ற ஊழியர்கள் சம்பளம் மற்றும்…
திரு.இ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் மறைவிற்கு இரங்கல் செய்தி
முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர், ஈரோடு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு.இ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் உடல் நலக்குறைவால் இன்று (14.12.2024) இயற்கை எய்தினார் என்ற…