“மா” (மாம்பழம்) விளைச்சல் செய்யும் விவசாயிகளுக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. தமிழக அரசை கண்டித்து வரும் (30.06.2025) திங்கள் கிழமை காலை 10 மணியளவில் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் கழக பொதுச்செயலாளர் புரட்சி அண்ணியார் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதில் கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர், வட்டம், வார்டு, ஊராட்சி, கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணியினர், கழக தொண்டர்கள் மற்றும் விவசாய பெருமக்களும், கூலி தொழிலாளர்களும், பொதுமக்களும், விவசாயிகளுக்கான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு வெற்றியடைய செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
