தமிழகத்தில் இந்த (2025) ஆண்டு ‘மா’ (மாம்பழம்) விளைச்சல் அதிகமாக இருந்தாலும், அதற்கான விலை மிக, மிக குறைவாக இருப்பதால், விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதேபோல் தர்பூசணி பழம் பருவகாலங்களின் விளைச்சலின் போதும், தர்ப்பூசணியில் மருந்து கலந்து உள்ளது என்று வதந்திகளை பரப்பியதால் மிகக் குறைந்த விலைக்கு போனதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். இப்படி தொடர்ந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருளுக்கு உரிய விலை கிடைக்காமல் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். மேலும் தமிழ்நாட்டில் மிகவும் துயரமான ஒரு நிலையில் விவசாயிகள் இருக்கிறார்கள். எனவே தமிழக அரசு உடனடியாக விவசாயிகள் பிரச்சனையில் கவனம் செலுத்தி, அவர்கள் விளைவித்த பொருளுக்கான உரிய விலையை கிடைக்கச் செய்ய வேண்டும். மாம்பழ விளைச்சல் செய்யும் விவசாயிகளுக்கு இந்த அரசு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கி விவசாயிகளைக் காக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
