Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • மாற்றுக் கட்சியினர் தேமுதிக நிர்வாகிகளை தாக்கியதைக்  வன்மையாகக் கண்டித்து அறிக்கை

மாற்றுக் கட்சியினர் தேமுதிக நிர்வாகிகளை தாக்கியதைக்  வன்மையாகக் கண்டித்து அறிக்கை

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் அலுவலகம் திறப்பதற்காக தேமுதிகவின் மாவட்ட கழக செயலாளர்  திரு.கார்த்திகேயன் மற்றும் கழக நிர்வாகிகள் சென்று திறந்த போது மாற்றுக் கட்சியினர் அலுவலகத்திற்கு உள்ளே புகுந்து அங்கிருந்த தேமுதிக நிர்வாகிகளை கத்தி, அரிவாள், இரும்பு கம்பி போன்றவை மூலம் தாக்கியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த கலவரம் காவல் நிலையத்திற்கு எதிரே நடந்துள்ளது. காவல் துறையினர் அலட்சியமாகக் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர் நமது நிர்வாகிகள் காவல் நிலையத்திற்கு சென்று காவல்துறையினரை அழைத்ததன் பின்பு கலவரத்தைத் தடுத்துள்ளனர். இது மிகவும் வன்மையாகக் கண்டிக்க கூடிய ஒரு செயல். தேமுதிக நிர்வாகிகளை தாக்கியவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து உடனடியாக யாராக இருந்தாலும் காவல் துறை கைது செய்யவேண்டும். இல்லையெனில் தேமுதிக சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்துக் கொள்கிறோம்.

Releated Posts

உலக நாய்கள் தினத்தை முன்னிட்டு அறிக்கை

நாய்கள், மனிதர்களுக்கு உண்மையான தோழர்களாகவும், குடும்ப உறுப்பினர்களாகவும், வீட்டின் பாதுகாவலர்களாகவும் விளங்குகின்றன. இந்து மரபில், பைரவர் வடிவமாக வழிபடப்படும் நாய்கள், விசுவாசத்தையும், நன்றியையும் வெளிப்படுத்துகின்றன.…

ByBySenthil KumarAug 26, 2025

கேப்டனின் 73வது பிறந்தநாளில் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி

இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர்போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்ற சொல்லுக்கு இலக்கணமாக நம்மிடமிருந்து மறைந்தாலும் தெய்வமாக நம்…

ByBySenthil KumarAug 26, 2025

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாநில மாநாடு அறிவிப்பு – 25.08.2025

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் “மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0” வரும் 09.01.2026 ஆம் தேதி மாலை 02.45 மணியளவில் கழக பொதுச்…

ByBySenthil KumarAug 25, 2025

தேமுதிக வறுமை ஒழிப்பு தின நல உதவிகள் -பத்திரிக்கை செய்தி – 24.08.2025

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளான, ஆகஸ்ட் 25-யை “வறுமை ஒழிப்பு தினமாக” தேமுதிக கடைப்பிடித்து…

ByBySenthil KumarAug 24, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...