கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு அருகில் நேற்று இரவு கல்லூரி மாணவி ஒருவர் தன் காதலருடன் பேசிக் கொண்டிருக்கும் போது, அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் அவர் வாகனத்தை தாக்கி அந்த பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தது வன்மையாக கண்டிக்க கூடியது. பாலியல் வன்கொடுமை யார் செய்தார்கள் என்பதை கண்டறிந்து உடனடியாக கைது செய்து தண்டனை வழங்க வேண்டும். கோயம்புத்தூர் விமான நிலைய என்பது முக்கியமான பகுதி, அந்த இடத்திலேயே இது போன்ற செயல்கள் நடக்கிறது என்றால் காவல்துறை என்ன செய்கிறார்கள் என்ற கேள்வி மக்களுக்கு எழுகிறது. அதேபோல் சிசிடிவி கேமரா அனைத்து இடத்திலும் செயல்படுகிறதா? இல்லையா? என்பதையும் தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும். ஏற்கனவே அண்ணா பல்கலை கழகத்தில் இது போன்ற செயல்கள் நடந்திருக்கிறது. மேலும் பல்வேறு இடங்களில் மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமைகளும், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலையும் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே அரங்கேறி வருகிறது. நேற்று கோயம்புத்தூர் விமான நிலையம் அருகில் நடந்த பாலியல் வன்கொடுமை இனி எங்கும் நடக்காத வண்ணம் காவல்துறையை தன் கையில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக கவனம் செலுத்தி, பெண்களுக்கும், மாணவிகளுக்கும் உறுதியான பாதுகாப்பை ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் சிசிடிவி கேமராவை அனைத்து இடத்திலும் பொருத்தி, தவறுகளில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்து, குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும். பாலியல் வன்கொடுமை செய்த பெண்ணுக்கு உரிய பாதுகாப்பையும், சிகிச்சையும் தரவேண்டும். இனிமேல் தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை எங்கும் நடக்காத வண்ணம் தமிழக அரசு பெண்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்று தேமுதிக சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.




