பழம்பெரும் பாலிவுட் நடிகர் திரு.தர்மேந்திரா (89) வயது மூப்பின் காரணமாகச் மும்பையில் காலமானார் என்கிற செய்தி வேதனை அளிக்கிறது. கேப்டனுக்கு பிடித்த ஒரு நடிகர் தர்மேந்திரா. கேப்டன் மீது பேரன்பும் மரியாதையும் கொண்டவர். 1992 ஆம் ஆண்டு வெளியான பரதன் திரைப்படம் இவர்களிடம் உரிமம் பெற்று எடுக்கப்பட்டது. அப்போது அவரிடம் பழகுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. அவரின் முக்கியமான திரைப்படம் சோலே இந்த படத்தை வைத்துதான் கேப்டன் பிரபாகரன் திரைப்படம் எடுக்கப்பட்டது. அனைவருக்கும் முன் உதாரணமாக இருந்தவர். அனைவரிடமும் அன்போடும், பாசத்தோடும் பழகக் கூடியவர். அவரது இழப்பு பாலிவுட் திரை உலகிற்கே ஈடு இணையே இல்லாத இழப்பு, அவர் மறைந்தாலும் காலம் இருக்கும் வரை அவரின் புகழ் நிலைத்திருக்கும். தன்னுடைய நடிப்பு ஆற்றலால் அனைவரையும் கவர்ந்ததோடு தன்னுடைய திறமையையும் நிரூபித்தவர். அவருடைய ஆன்மா சாந்தியடையவும் அவரை இழந்து வாடும் திரையுலகத்தினருக்கும் குடும்பத்தாருக்கும் மனைவி ஹேம மாலினி மற்றும் மகன்கள் சன்னி தியோல், பாபி தியோல், ஈஷா தியோல் அவர்களுக்கும் தேமுதிக சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.




