Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டி போராடுபவர்களைக் கைது செய்வதைக் கண்டித்து அறிக்கை

பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டி போராடுபவர்களைக் கைது செய்வதைக் கண்டித்து அறிக்கை

பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தர கோரி சென்னையில் தொடர்ந்து பத்து நாட்களாகப் போராடி வருகிறார்கள். பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டத்தின் போது காவல்துறையினர் காலையில் கைது செய்வதும், மாலையில் விடுவிப்பதும் தினந்தோறும் வாடிக்கையாக உள்ளது. இதை தேமுதிக சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம். இதற்கு முன்பு பகுதி நேர ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக தங்களுடைய உரிமைக்கான போராட்டத்தை முன் நிறுத்தி வருகின்றனர். ஆளும் திமுக அரசு, கொடுத்த வாக்குறுதியாக 181ல் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார் என்று ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாட்களில் பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்கள் கொடுத்த வாக்குறுதிப்படி நடந்து கொள்ளவில்லை. 50 மாதங்கள் முடிந்தும் பகுதி நேர ஆசிரியர்களுக்குக் கொடுத்த பணி நிரந்தரம் செய்யவில்லை. இதுவரைக்கும் அவர்களுடைய கோரிக்கையைச் செவி சாய்க்கவும் இல்லை, பரிசீலனை செய்து, அவர்களுக்கு ஆவணமும் செய்யவில்லை. தமிழக அரசு பள்ளிகளில் 12ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் 15ஆண்டுகளாக பணி செய்து வருகிறார்கள். தற்போது கிடைக்கின்ற சொற்ப ஊதியம் 12,500 ரூபாயை வைத்து குடும்பங்கள் நடத்த முடியாமல் தவித்து வருகின்றார்கள். தேர்வு எழுதி தகுதி பெற்ற அவர்களுடைய அடிப்படை உரிமையைக் கேட்டதை அலட்சியப் படுத்தாமல், கண்ணீர் மல்க வாழ்ந்து கொண்டிருக்கும் பல ஆயிரம் குடும்பங்களை காக்க வேண்டியது இந்த அரசின் கடமை. இந்த அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு அவர்களுக்கு உரிய ஆவணம் செய்து  பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தேமுதிக சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.

Releated Posts

தேமுதிக வறுமை ஒழிப்பு தின நல உதவிகள் – பத்திரிக்கை செய்தி – 24.08.2026

*தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் பத்மபூஷன்* *கேப்டன் விஜயகாந்த்* அவர்களின் பிறந்த நாளான, ஆகஸ்ட் 25-யை *”வறுமை ஒழிப்பு தினமாக”* தேமுதிக கடைப்பிடித்து…

ByBySenthil KumarAug 24, 2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின விழாவை நாம் சிறப்பாகக் கொண்டாடும் இந்த நன்னாளிலே, நம் தாய்நாட்டின் விடுதலைக்காகத் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த…

ByBySenthil KumarAug 14, 2026

கரூர் சிறுமி பாலியல் வன்கொடுமை முயற்சியை தடுத்து நிறுத்திய பாட்டிக்கு பாராட்டு

கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள நான்கு வயது, 9 வயது, சிறுமிகள், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய பல முறை முயற்ச்சி செய்த அந்த…

ByBySenthil KumarAug 14, 2026

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 ராமநாதபுரம் மீனவர்கள் உள்ளிட்ட கைது செய்யபட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி அறிக்கை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள ராமநாதபுரத்தைச் சேர்ந்த 9 இந்திய மீனவர்களையும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது.…

ByBySenthil KumarAug 14, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...