ஹைதராபாத்தில் இருந்து மதீனாவுக்கு புனித பயணம் சென்ற யாத்ரீகர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்குப் பேருந்தில் செல்லும் போது டீசல் டேங்கர் லாரி மீது மோதிய விபத்தில் 20 பெண்கள், 11 குழந்தைகள் உட்பட 42 இந்தியர்கள் உயிர் பலியாகியுள்ளது மிகவும் மன வேதனையாக உள்ளது. காயமடைந்தோர் விரைவில் பூரண குணமடைய வேண்டும். இந்த மிகப்பெரிய துயரத்தில் உயிரிழந்தோரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை தேமுதிக சார்பாக வேண்டுகிறோம். எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அந்த குடும்பங்களுக்கு இறைவன் வலிமையையும், தைரியத்தையும் கொடுக்கட்டும்.




