தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாள் ஆகஸ்ட் 25 “வறுமை ஒழிப்பு தினமாக” தேமுதிக கடைப்பிடித்து வருகிறது. வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு (24.08.2025) அன்று புரட்சி அண்ணியார் கழக பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் புதுடெல்லியில் உள்ள டெல்லி தமிழ் சங்கத்திற்கு ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவிக்காக 1 இலட்சம் காசோலை வழங்கினார். அதை புதுடெல்லியில் தமிழ் சங்கம் பொதுச் செயலாளர் திரு.இரா.முகுந்தன் அவர்கள் டெல்லியில் ஏழை, எளிய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையை வழங்கினார்.




