தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் புரட்சி அண்ணியார் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (11.07.2025) சென்னை எழும்பூரில் உள்ள சுதந்திர வேட்கையை தமிழக மக்களுக்கு விதைத்த விடுதலை போராட்ட வீரர், பீரங்கி முன் மரணிக்கும் தருவாயிலும் தன்னுடன் போராடியவர்களை காட்டிக்கொடுக்க மாட்டேன் என்று நெஞ்சுரத்துடன் முழங்கிய மாவீரர்_அழகுமுத்துக்கோன் அவர்களின் 316 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று 11.07.2025 அவரது திருவுறுவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். உடன் கழக பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்கள், கழக தலைமை நிலையச் செயலாளர் திரு.ப.பார்த்தசாரதி,Ex:MLA., அவர்கள், கழக துணைச் செயலாளர் திரு.எம்.ஆர்.பன்னீர்செல்வம் அவர்கள், மத்திய சென்னை மாவட்ட கழக செயலாளர் திரு.மாறன் அவர்கள், மற்றும் கழக நிர்வாகிகள், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.





