கனடா மற்றும் தெலுங்கு மொழி பேசும் அனைவருக்கும் உகாதி புத்தாண்டு திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஜாதி, மதம், மொழியால் வேறுபட்டு இருந்தாலும், நாம் அனைவரும் இந்திய நாட்டில் சகோதர, சகோதரிகளாக, வேற்றுமையில், ஒற்றுமையோடு வாழ்ந்து வருகிறோம். நமது தாய் திருநாட்டின் எதிர்காலத்தை சிறப்பிப்போம். மேலும் அனைவருக்கும் வளமான நல்ல ஆண்டாக இந்த ஆண்டு அமைய வேண்டும் என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக உகாதி புத்தாண்டு திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
