Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தேனி சிறையில் இருந்து சிறைக்காவலர்களை தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பியோடிய சம்பவத்தை கண்டித்து அறிக்கை

தேனி சிறையில் இருந்து சிறைக்காவலர்களை தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பியோடிய சம்பவத்தை கண்டித்து அறிக்கை

தேனி சிறையில் இருந்து சிறைக்காவலர்களை தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பியோடிய செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. ஒரு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் தப்பிச் செல்லும் அளவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலவீனமாக இருப்பது, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் சிறை நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. சிறைச்சாலைகள் என்பது குற்றவாளிகளைச் சட்டப்படி தண்டித்து, தண்டனை வழங்கும் ஒரு இடமாகும். அத்தகைய சிறைச்சாலையிலிருந்து 17 கைதிகள் தப்பியோடிய சம்பவம் என்பது சாதாரணமான ஒன்றல்ல. இது சிறைத்துறையின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய குறைபாட்டையே வெளிப்படுத்துகிறது.

தமிழகத்தில் ஏற்கனவே சட்டம்-ஒழுங்கு தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது சிறைச்சாலையிலேயே இத்தகைய சம்பவம் நடைபெற்றிருப்பது பொதுமக்களிடையே அச்சத்தையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 17 கைதிகள் எவ்வாறு தப்பிச் சென்றார்கள்?. சிறைச்சாலையில் பாதுகாப்புப் பணியில் இருந்த அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?. கண்காணிப்பு நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டனவா? என்ற கேள்விகளுக்கு தமிழக அரசு உடனடியாகப் பதிலளிக்க வேண்டும். தப்பியோடிய கைதிகளை உடனடியாகக் கண்டறிந்து கைது செய்வதற்குத் தமிழக காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட பகுதிகளில் உரிய கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தி, பாதுகாப்புக் குறைபாடுகளுக்குக் காரணமானவர்கள் யார் என்பதைத் தெளிவுபடுத்தி, தவறு செய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறைச்சாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை முழுமையாக ஆய்வு செய்து, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அரசே, சிறைச்சாலைகளின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறுவது மிகுந்த கண்டனத்திற்குரியது. தப்பி ஓடிய பிறகு கைதிகளை கைது செய்வது என்பது கேள்விக்குறியது. இந்த நிகழ்வு கைதிகளுக்கு ஒரு முன் உதாரணமாக அமைந்துவிடக்கூடாது. எனவே சிறை பாதுகாப்பை கடுமையான நடவடிக்கை மூலம் உறுதி செய்ய வேண்டும். தமிழக அரசு இச்சம்பவத்தை அலட்சியமாகக் கருதாமல், உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிப்பதோடு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

திருமதி.பிரேமலதா விஜயகாந்த்,MLA.,

கழக பொதுச் செயலாளர்

தேசிய முற்போக்கு திராவிட கழகம்

Releated Posts

வீரத்திற்கும், தியாகத்திற்கும் அழியாத அடையாளமாகத் திகழும் மருது சகோதரர்களின் 225-வது நினைவு தினம்

வீரமங்கை வேலுநாச்சியாரின் வெற்றிக்குத் துணைநின்று, ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கு எதிராகத் துணிச்சலுடன் போராடிய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர்களான பெரிய மருது, சின்ன மருது சகோதரர்களின்…

ByBySenthil KumarOct 24, 2026

தேமுதிக பத்திரிக்கை செய்தி – 23.10.2026

மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களை இன்று (23.10.2026) தேமுதிக பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திருமதி.பிரேமலதா விஜயகாந்த்,MLA., அவர்களுடன் இணைந்து, தேமுதிக…

ByBySenthil KumarOct 23, 2026

விருத்தாசலத்தில் வாகன விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக அரசு சிகிச்சை அளிக்க வேண்டி அறிக்கை

விருத்தாசலத்தில் வாகன விபத்து – 40 பேர் படுகாயம் அடைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் நிகழ்ந்த வாகன…

ByBySenthil KumarOct 23, 2026

தேமுதிக – பத்திரிக்கை செய்தி – 22.10.2026

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், மாண்புமிகு தமிழக முதலமைச்சருமான திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை, இன்று (22.10.2026) தேமுதிக பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திருமதி.பிரேமலதா விஜயகாந்த்…

ByBySenthil KumarOct 22, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...