மருத்துவர்களின் வரலாற்றில், மறக்க முடியாத நாள் இன்று (01-07-2025) மருத்துவர்கள் தினம்! மருத்துவத்துறையில் முன்மாதிரியான மாநிலமாகத் திகழும் நமது தமிழ்நாட்டில், அரசு மருத்துவர்களுக்குக் குறைவான ஊதியம் அளிக்கப்படுவது மிகவும் வேதனைக்குரியது. தகுதிக்கு ஏற்ற ஊதியம் வேண்டி அரசு மருத்துவர்கள் போராடி வருகின்றனர். நீண்ட காலமாகவே மருத்துவர்கள் தொடர்ந்து பல கோரிக்கைகளை அரசுக்கு முன் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த அரசு அவர்களுடைய கோரிக்கைகளை செவி சாய்க்கவில்லை. கொரோனா காலகட்டத்தில் அவர்களின் உயிரைப் பணையம் வைத்து உழைத்த உழைப்பையும் நினைவில் கொண்டு அவர்களின் கோரிக்கைகளை இந்த அரசு பரிசீலனை செய்து உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறோம். “இரவு பகல் பாராது மக்களுக்காக சேவை செய்யும், மனித கடவுளாக அனைவராலும் பார்க்கப்படும் மருத்துவர்களை இந்த நாளில் வாழ்த்துவோம்” தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக உலக மருத்துவர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.






