பக்ரீத் திருநாளை முன்னிட்டு, நாடு முழுவதிலும் உள்ள முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு என் இதயபூர்வமான பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இது ஈதுல்-அழ்ஹா எனப்படும் பெருநாளாகும். தியாகத்தையும், ஈகையை சின்னமாகக் கொண்ட இந்த நாளில், மனித நேயம், சமரசம், சகோதரத்துவம் ஆகியவை வலியுறுத்தப்படுகின்றன. இத்தகைய உயரிய வாழ்வு முறை அடிப்படைகளை நினைவூட்டும் இந்த நாளில், அனைவரும் அமைதியாக, மகிழ்ச்சியாகவும், பாசத்துடனும் திருநாளை கொண்டாட இறைவன் அருள் புரிவானாக. இந்நாளில் ஏழை, எளியோர்களுடன் நம் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்வோம். நமது சமுதாயத்தில் மத நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் அன்பு நிரம்பிப் பெருக வாழ்த்துகிறேன்.
