தேசிய கல்விக் கொள்கையை தமிழகம் ஏற்றுக்கொள்ளாதவரை அதற்கான நிதியை வழங்க முடியாது என்று மத்திய அமைச்சர் கூறி இருப்பது கண்டனத்திற்குரியது. தமிழகத்தை பொறுத்தவரைக்கும் இரு மொழிக் கொள்கை தான் பல ஆண்டுகளாக கடைபிடித்து வருகிறது. அப்படி இருக்கும் பொழுது முன்மொழி கல்வியை கட்டாயப்படுத்துவது நிச்சயமாக ஏற்புடையதல்ல. பள்ளிகளுக்கு பெறவேண்டிய நிதியை பெற முடியாமல் இருப்பது, நமது மாணவர்களுக்கு தான் பெரிய இழப்பாகும். மாணவர்களின் கல்வியும் மிக முக்கியம். மாணவர்களுக்கும், பள்ளிக்கும் தேவையான நிதி உதவியும் மிக முக்கியம். எனவே மத்திய அரசும், தமிழக அரசும் கலந்தாலோசித்து இதற்கு நல்ல தீர்வு காண வேண்டும். “மாற்றான் போக்கு எண்ணத்தோடு” மத்திய அரசு செயல்படுவது மாணவர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கும்.
