ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தினால் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் மண்சரிவு ஏற்பட்டு மலை உச்சியில் இருந்த பாறைகள் உருண்டு அடிவாரப் பகுதிகளில் இருக்கும் குடியிருப்புகளில் விழுந்ததில் 7 பேர் சிக்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மண்சரிவால் ஏற்பட்ட இடிபாடுகளில் 5 குழந்தைகள் உட்பட 7 பேர் சிக்கியிருப்பதாக கூறப்படும் நிலையில், மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி, சிக்கியிருக்கும் அனைவரையும் பாதுகாப்பான முறையில் மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும். புயல் கரையை கடந்த நிலையிலும், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் குறுகிய கால இடைவெளியில் கொட்டித் தீர்த்த கனமழையால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதோடு குடியிருப்புகளையும் மழைநீர் சூழ்ந்திருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் முழுமையாக முடங்கியுள்ளது. எனவே, மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி மண்சரிவில் சிக்கியிருக்கும் 7 பேரையும் பாதுகாப்பாக மீட்பதோடு, கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்திருக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பிட ஏதுவாக உரிய நிவாரணத் தொகையை உடனடியாக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
திருவண்ணாமலை மலை அடிவாரத்தில் ஏற்பட்ட மண்சரிவில் 7 பேர் சிக்கித் தவிப்பு – மீட்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்படுவதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டி அறிக்கை
Releated Posts
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அறிக்கை
உலகமெங்கும் டிசம்பர் 3ஆம் நாள் மாற்றுத் திறனாளிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. நம்மில் பிறந்து நம்முடைய உறவினர்களாக வாழும் அவர்களுக்கு இயற்கையினால் ஏற்பட்ட குறைபாட்டை உணர்ந்து,…
திருவண்ணாமலையில் மண் சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியளிக்கிறது
திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண் சரிவின் காரணமாக பாறைகள் உருண்டு விழுந்ததில் 3 வீடுகளுக்குள் 24 மணி நேரத்திற்கும் மேலாக சிக்கி தவித்த 7 பேரும்…
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் உடனடியாக நிவாரணமும், பயிர் இழப்பீடும் வழங்க ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டி அறிக்கை
மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அல்லது…
டெல்டா பகுதி முழுவதும் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நிலங்களில் தேங்கியிருக்கும் தண்ணீரை வெளியேற்றி, நிவாரண உதவியும் வழங்க வேண்டி அறிக்கை
டெல்டா பகுதி முழுவதும் நீரில் மூழ்கி விவசாய பெருமக்களுக்கு கடும் இன்னலை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு உடனடியாக தனிக் கவனம் செலுத்தி, டெல்டா…