கடந்த 18.11.2024 அன்று திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் வளர்க்கப்படும் தெய்வானை (வயது 26) என்ற யானை தாக்கி திருச்செந்தூர் வஉசி நகரைச் சேர்ந்த திரு.சதாசிவம் மகன் திரு.உதயகுமார் (45) என்ற உதவி பாகனும், அவரை காண வந்திருந்த அவரது உறவினர் கன்னியாகுமரி (மேற்கு) மாவட்டம், பலுகல் பகுதியைச் சேர்ந்த திரு.கிருஷ்ணன் நாயர் மகன் திரு.சிசுபாலன் (வயது 58) என்பவரும் உயிரிழந்துள்ளார். திரு.உதயகுமார் மற்றும் திரு.சிசுபாலன் ஆகியோர்களுக்கு தமிழ்நாடு அரசாங்கம் இதுவரை இழப்பீடு எதுவும் வழங்கவும் இல்லை, அறிவிக்கவும் இல்லை. மேலும் இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகளோ, அமைச்சர்களோ யானை தாக்கி உயிரிழந்த திரு.உதயகுமார் மற்றும் திரு.சிசுபாலன் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவில்லை. எனவே உதயகுமார் மற்றும் சிசுபாலன் ஆகியோருக்கு பெரும் தொகையை நிவாரணமாக உடனடியாக வழங்க வேண்டும் எனத் தமிழக அரசையும், இந்து சமய அறநிலையத்துறையையும் கேட்டுக்கொள்கிறேன்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் வளர்க்கப்பட்ட யானை தாக்கி உயிரிழந்த குடும்பத்திற்குத் தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டி அறிக்கை
Releated Posts
அரசு ஊழியர்களுக்குப் பாதுகாப்பு வழங்கத் தவறிய ஆளும் அரசைக் கண்டித்து அறிக்கை
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் திரு.ரமணி அவர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு எனது…
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றியதை வரவேற்று அறிக்கை
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றியதற்கு தேமுதிக சார்பாக நாங்கள் வரவேற்பை தெரிவித்துக் கொள்கிறோம். கள்ளக்குறிச்சி மற்றும் தமிழகம் முழுவதும் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம்…
தமிழகத்தில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் அவலநிலை குறித்து அறிக்கை
தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் வீடு இல்லாதவர்களுக்கு கலைஞரின் கனவு இல்ல திட்டம் மூலம் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும் என அரசு தெரிவித்தது.…
வேளாண் கல்லூரி மாணவர்களை அரசு பணிக்கு ஈடுபடுத்தியதை கண்டித்து அறிக்கை
தமிழக அரசு வேளாண் நிலம் மற்றும் பயிர் இவைகளை டிஜிட்டல் முறைப்படுத்தும் தமிழக அரசின் செயல் திட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர், சர்வேயர் இவர்கள்…